தமிழ்நாடு
அரசுப்பள்ளி விழாவில் பா.ம.க. துண்டுடன் நடனமாடிய மாணவர்கள்
- சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
- பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 'மறுமலர்ச்சி' படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு மாணவர்கள் பா.ம.க. துண்டுடன் நடனமாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மறைந்த காடுவெட்டி குரு, வீரப்பன் படம் பொறித்த டி சர்ட் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பா.ம.க. துண்டுடன் சாதி பாடலுக்கு நடனமாட செய்ததால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.