தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #FairDelimitationForTN ஹேஷ்டேக்

Published On 2025-02-25 16:21 IST   |   Update On 2025-02-25 16:21:00 IST
  • தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதி குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது
  • தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது.

இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர். 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை. மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், #FairDelimitationForTN என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Tags:    

Similar News