தமிழ்நாடு
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
- இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி பள்ளி சிறுமியை 18 வயது இளைஞர் திருமணம் செய்தார்.
- 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் இளைஞரிடம் பேசியது தெரியவந்துள்ளது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த கார்த்திக்குமார் (18) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 16 வயது பள்ளி சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் செல்போன் எண்னை ஆய்வு செய்தனர்.
அதில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 வயதான கார்த்திக் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து கார்த்திக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அப்போது தான் அந்த சிறுமியை இளைஞர் திருமணம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.