தமிழ்நாடு
ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார் - சிவகுமார்
- நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான் என சிவகுமார் தெரிவித்தார்.
- பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவகுமார் பேசினார்.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "இன்றைக்கும் ஒரு சாதிய கட்டமைப்பு உள்ளது. இவன் மேல்சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்.. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என 4 வகைகளாக பிரித்து.. இதில் சூத்திரன் கடைசி ஆளு.
இப்படி கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார்.