தமிழ்நாடு
சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல - எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
- 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.
- ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.
மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே 500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று எச். ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எச். ராஜா பேசியது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை" என்று தெரிவித்துள்ளார்.