தமிழ்நாடு

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பஸ் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது

Published On 2025-02-13 14:33 IST   |   Update On 2025-02-13 14:33:00 IST
  • பிரதிநிதிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு.
  • 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தாம்பரம்:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் போடப்படவில்லை. வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 15-வது ஊதிய ஒப்பந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சங்க பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடராஜன், சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்றும் நாளையும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால் நாளை 73 தொழிற்சங்கங்கள் நடைபெற உள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கண்கட்டி வித்தை காட்டுவதாக, தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News