செய்திகள்

வாட்ஸ்அப் டெலீட் ஆப்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது

Published On 2017-11-01 10:12 IST   |   Update On 2017-11-01 10:12:00 IST
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டெலீட் (Delete for Everyone) அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய அப்டேட் மூலம் தாங்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும். இந்த அம்சம் உங்களது போன் மட்டுமின்றி நீங்கள் அனுப்பியவரின் போனிலும் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை திரும்ப பெற குறிப்பிட்ட குறுந்தகவலை தேர்வு செய்து டிராஷ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.



இவ்வாறு கிளிக் செய்ததும் குறுந்தகவல் உங்களுக்கு மட்டும் அழிக்கப்பட வேண்டுமா அல்லது அனைவருக்கும் அழிக்கப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் பாப் அப் மூலம் திரையில் தோன்றும். இதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் அனுப்பியவருக்கும் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டதை தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.

எனினும் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் செயல்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு நிமிடங்களுக்கு பின் அனுப்பிய குறுந்தகவலை அழிக்க முடியாது. மேலும் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை நீங்கள் அனுப்பியவர் பார்த்துவிட்டால் இந்த அம்சம் வேலை செய்யாது. இத்துடன் நீங்கள் அழிக்க முயன்ற குறுந்தகவல் அழிக்கப்படாத பட்சத்தில் அதற்கான நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும்.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் அனைத்து ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் புதிய விண்டோஸ் போன்கள் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

Similar News