செய்திகள்
இதய ஆபரேஷனுக்கு பின்னர் குணமடைந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் டிஸ்சார்ஜ் ஆனார்
இதயம்சார்ந்த கோளாறினால் லண்டன் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ‘ஓபன் ஹார்ட்’ ஆபரேஷனுக்கு பின்னர் குணமடைந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
லண்டன்:

இதயக் கோளாறு காரணமாக ஏற்கனவே சில ஆண்டுகளாக நவாஸ் ஷெரிப் லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ‘ஓபன் ஹார்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. லண்டன் ஹார்லே ஸ்டிரீட் கிளினிக் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆபரேஷனுக்கு பின்னர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது.
இதையடுத்து, நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மனைவி குல்சும் நவாஸ், மகன்கள் ஹஸன், ஹுஸைன், மகள் மரியம் நவாஸ் ஆகியோருடன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேவந்த நவாஸ் ஷெரிப் அங்கிருந்து காரில் ஏறி, லண்டன் பார்க் லேன் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார்.
அங்கு சில நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் டாக்டர்களின் ஆலோசனைப்படி விரைவில் பாகிஸ்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.