செய்திகள்
மெக்சிகோவில் மேயரை சுட்டு கொன்ற போதை மருந்து கும்பல்
மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் மேயர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களுடன் அவர்கள் தனி படையையே வைத்து உள்ளனர்.
அவர்களை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகிறது. அடிக்கடி போலீசார் மற்றும் ராணுவத்தினரை கொன்று குவித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்களுக்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
இந்த நிலையில் மேயர் ஒருவரை போதை மருந்து கும்பல் சுட்டு கொன்றுள்ளது. அங்கு குவரியா மாகாணத்தில் உள்ள குயிடாட் நகரத்தின் மேயராக இருந்தவர் அம்பு ரோஸ்யா சோட்டா. இவருக்கு ஏற்கனவே போதை மருந்து கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. இதனால் அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும், போதை மருந்து கும்பல் அவரை சுட்டு கொன்றுள்ளது.
கடந்த வாரம் இதே போல இன்னொரு மேயரை போதை மருந்து கும்பல் சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது.