உலகம்

காசாவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 2 பத்திரிகையாளர் உட்பட 11 பேர் உயிரிழப்பு

Published On 2025-03-16 17:04 IST   |   Update On 2025-03-16 17:08:00 IST
  • பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
  • இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.

வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.

இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News