உலகம்

போரை நிறுத்துங்கள்: வைரலாகும் காசா சிறுவனின் வீடியோ

Published On 2024-05-21 09:02 GMT   |   Update On 2024-05-21 09:40 GMT
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது.
  • போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.

காசா:

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.

போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போரை நிறுத்துங்கள் என பாலஸ்தீன சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த வீடியோவில் சிறுவன் கூறியதாவது:

தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறோம்.

காசாவில் மக்கள் மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு எனக்கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை. என அழுதபடியே கூறுகிறார்.

போரை நிறுத்துங்கள் எனக்கூறும் காசா சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

Similar News