உலகம்

ஜெர்மனியில் சோகம்: கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் மோதி 28 பேர் படுகாயம்

Published On 2025-02-13 23:47 IST   |   Update On 2025-02-13 23:47:00 IST
  • ஜெர்மனியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கார் பாய்ந்தது.
  • இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

முனீச்:

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடக்கிறது. இதற்காக உலக தலைவர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், முனீச்சில் கூட்டத்தில் வேகமாக புகுந்த கார் மோதியதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது பாய்ந்தது. இந்தச் சம்பவத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்கிருந்த போலீசார் கார் ஓட்டி வந்த 24 வயது நபரை கைதுசெய்தனர். விசாரணையில், அவர் ஆப்கனைச் சேர்ந்த அகதி என தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News