உலகம்

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் தள்ளி வைப்பு

Published On 2024-04-20 06:42 GMT   |   Update On 2024-04-20 06:42 GMT
  • பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
  • நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

வாஷிங்டன்:

உலக பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இரண்டு நாள் பயணமாக நாளை(21-ந்தேதி) இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி டெஸ்லா நிறுவன கூட்டத்தில் எலான் மஸ்க் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் அவரது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் எக்ஸ் தள பக்கத்தில் கூறும்போது, துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதால் இந்திய பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News