null
தாத்தா-பாட்டி உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவர்
- ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர்.
- கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் கொப்போலா டிரைவ் ஆப் நியூ டூர்ஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த திலீப்குமார் பிரம்மபட் (72), மனைவி பிந்து, மகன் யஷ்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (23) சுட்டு கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாணவரான ஓம்பிரம்மபட், திலீப்குமார்-பிந்து தம்பதியின் பேரன் ஆவார். அவர் காண்டோ பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர் எதற்காக 3 பேரை கொன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓம்பிரம்மபட், கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.