உலகம்
இங்கிலாந்தில் டிக் டாக் செயலிக்கு தடை
- இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பாதுகாப்பு கருதி இங்கிலாந்து அரசு நடவடிக்கையினை எடுத்து உள்ளது.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து உள்ளது. இங்கிலாந்து அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது.
ஆனால் தங்கள் சொந்த போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை இல்லை என்றும் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.