உலகம்

மத்திய கல்வித்துறையை கலைத்த டிரம்ப் - மாகாணங்களுக்கு முழு அதிகாரம் வழங்கும் உத்தரவில் கையெழுத்து

Published On 2025-03-21 06:57 IST   |   Update On 2025-03-21 10:33:00 IST
  • இலவசமாக பள்ளிகளை நடத்த வேண்டும் என வலதுசாரிகள் விரும்புகிறது.
  • ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்பட சிரித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது. இந்த உத்தரவின் மூலம் கல்வித்துறை அதிகாரம் முழுவதும் மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் அமைக்கப்பட்ட மேசைகளில் சுற்றி அமரவைக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் டொனால்டு டிரம்ப் மத்திய கல்வித்துறையை கலைக்கக் கோரிய உத்தரவில் கையெழுத்திட்டார். பிறகு தான் கையெழுத்திட்ட ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்படி சிரித்தார்.


 

"இந்த உத்தரவு, கல்வித்துறையை நிரந்தரமாக நீக்கத் தொடங்கும். நாங்கள் அதை மூடப் போகிறோம். விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும். இது எங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. நாங்கள் கல்வித்துறையை மாகாணங்களிடமே ஒப்படைக்கப் போகிறோம்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித் துறையை, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் மூட முடியாது. ஆனால் அதிபர் டிரம்ப் உத்தரவு கல்வித்துறையில் நிதி மற்றும் ஊழியர்களைப் பற்றாக்குறையை வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருக்கும்.

இந்த உத்தரவு, கல்வித் துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை, "மத்திய கல்வித் துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க" வலியுறுத்துகிறது.

Tags:    

Similar News