உலகம்

நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: லலித் மோடிக்கு மல்லையா எக்ஸ் தளத்தில் பதிவு

Published On 2024-12-19 13:53 GMT   |   Update On 2024-12-19 13:59 GMT
  • 6203 கோடி ரூபாய்க்கு 14,131.60 அளிக்கப்பட்டும், இன்னும் நான் பொருளாதார குற்றவாளிதான்- விஜய் மல்லையா.
  • இது கடந்து போகும் மை டியர் நண்பர் விஜய் மல்லையா. என்னுடைய நணபருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- லலித் மோடி.

இந்திய தொழில் அதிபரான விஜய் மல்லையா வங்கியில் பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

அதேபோல் நிதிமோசடி செய்த வழக்கில் கிரிக்கெட் நிர்வாகத்தில் கொடிகட்டி பறந்த லலித் மோடியும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு லலித் மோடி, எக்ஸ் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில் "என்னுடைய நண்பர் விஜய் மல்லையாவுக்கு என்னுடைய இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க்கையில் உறுதியாக ஏற்றம் தாழ்வு இருக்கும். நாம் இருவரும் அதை பார்த்துள்ளொம். இதுவும் கடந்து போகும். வரக்கூடிய வருடம் உங்களுக்கானதாக இருக்கலாம். நீங்கள் அன்பு மற்றும் சிரிப்பால் சூழ்ந்திருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு விஜய் மல்லையா "நன்றி அன்பான நண்பரே... நாம், பங்களிப்பை வழங்க முயற்சி செய்த நாட்டில் நம் இருவருக்கும் அநீதி இழைக்கப்பட்டள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மல்லையா "கடன் மீட்பு தீர்ப்பாயம் KFA கடனை ரூ.1200 கோடி வட்டி உட்பட ரூ.6203 கோடியாக தீர்ப்பளித்தது. நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட என்னுடைய சொத்துகளை விற்பனை செய்து வங்கிகளுக்கு 14,131.60 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

6203 கோடி ரூபாய்க்கு 14,131.60 அளிக்கப்பட்டும், இன்னும் நான் பொருளாதார குற்றவாளிதான். என்னுடைய கடனுக்காக இரண்டு மடங்கிற்கு மேல் பணத்தை எடுத்துக் கொண்டதை அமலாக்கத்துறை அல்லது வங்கி சட்டப்பூர்வமாக நியாயப்படுத்துகிற வரைக்கும், நான் தொடர்ப்போகும் நிவாரணத்திற்கு எனக்கு உரிமை உள்ளது" என மல்லையா தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த லலித் மோடி "இது கடந்து போகும் மை டியர் நண்பர் விஜய் மல்லையா. என்னுடைய நணபருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News