சீன அதிபருடன் நல்ல பழக்கம் இருக்கு.. நான் உயிர்பிழைத்ததும் எனக்கு அழகிய கடிதம் எழுதினார் - டிரம்ப்
- டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
- டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில், துப்பாக்கி சூட்டிற்கு பிறகு மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் தனது முதல் பிரசார பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "ஜனாதிபதியாக இருந்தபோது சீனா மீதான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விவாதித்தோம். துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும், சீன அதிபர் ஜி ஜின்பிங் என்ன நடந்தது என்று நலம் விசாரித்தார்."
"இது குறித்து ஜி ஜின் பிங் எனக்கு ஒரு அழகான கடிதம் எழுதினார். நான் ஜனாதிபதி ஜி ஜின் பிங்குடன் மிகவும் நன்றாகப் பழகினேன்" என்று கூறினார்.