உலகம்

ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என்று நினைத்து விழுங்கிய பெண்

Published On 2023-09-15 16:53 IST   |   Update On 2023-09-15 16:53:00 IST
  • உரையாடலில் மூழ்கிய பார்கர் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நினைத்தார்.
  • வைட்டமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது ஏர்பாட் ப்ரோவை தவறுதலாக விழுங்கினார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான டான்னா பார்கர் என்பவர் காலை நடைபயிற்சியின் போது நீண்ட கால தோழியை சந்திக்க நேரிட்டது. அச்சந்திப்பில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் பார்கர்.

உரையாடலில் மூழ்கிய பார்கர் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நினைத்தார். வைட்டமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது ஏர்பாட் ப்ரோவை தவறுதலாக விழுங்கினார். இதை அடுத்து வீட்டிற்கு திரும்பிய பார்கர் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து மருத்துவரை அணுகிய பார்கர் தற்போது நலமாக உள்ளார்.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தளத்தில் பார்கர் பதிவிட்ட வீடியோவை இதுரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

Tags:    

Similar News