ஓடும் விமான எஞ்சின் முன் ஆபத்தான முறையில் தண்டால் எடுத்த பாடிபில்டர்.. வைரலாகும் வீடியோ
- பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் முன் ஏறினார்.
- பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக பலர் ஆபத்தான விஷயங்களை செய்து வருகின்றனர். இதனால் பல முறை உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பாடிபில்டர் ஒருவர் ஓடும் விமான இன்ஜின் மீது ஏறி தண்டால் எடுத்த வீடியோ பரவி வருகிறது.
பிரெஸ்லி ஜினோஸ்கி என்ற 23 வயதான பாடிபில்டர் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் ஓடும் இன்ஜின் பகுதி முன் புஷ்-அப்களை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் பகுதிக்கு முன் ஏறி ஆபத்தான முறையில் புஷ்-அப் எடுப்பதை பலரும் கண்டித்துள்ளனர். இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடந்துள்ளது, அதை அவர் சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து பதிலளித்துள்ள சிட்னி விமான நிலையம், பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகதெரிவித்துள்ளது.