வழிபாடு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியினை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர். இம்மாதம் 13ம் தேதி காலையில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 14ம் தேதி மகா ரதம் எனப்படும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பதினெட்டாம் தேதி அதிகாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். இம்மாதம் 21ஆம் தேதி 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.