- ஏரியின் தெற்கு பகுதியை ரூ.48 லட்சம் செலவில் ஆழப்படுத்தி தூர்வாறுதல் பணிகள் நடைபெற உள்ளது.
- அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து 100 நாள் வேலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்
புதுச்சேரி:
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதிக்குட்பட்ட சாத்தமங்கலம் குடுவையாற்றில் ரூ.17 லட்சத்து 14 ஆயிரம் செலவி லும், கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஓடைவாக்காலை ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் செலவிலும், சிவராந்தகம் கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதியை ரூ.48 லட்சம் செலவில் ஆழப்படுத்தி தூர்வாறுதல் பணிகள் நடைபெற உள்ளது.
பணிகளை அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து 100 நாள் வேலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூரத்தி, செயற்பொறி யாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் வினோத்குமார், மகாதேவி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.