குறுகலான சாலையில் சிக்கித்தவித்த லாரி
- திருபுவனையில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள கடலூர் சாலையில் கட்டிடங்கள் நெருக்கமாக உள்ளதால் வாகனங்கள் திரும்ப முடியாமல் காலை அந்த வழியாக சென்ற லாரி நின்று போனது.
- சென்னை- நாகப்பட்டினம் நான்கு வழி விரிவாக்க சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
சென்னை- நாகப்பட்டினம் நான்கு வழி விரிவாக்க சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி திருபுவனை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருபுவனையில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் உள்ள கடலூர் சாலையில் கட்டிடங்கள் நெருக்கமாக உள்ளதால் வாகனங்கள் திரும்ப முடியாமல் காலை அந்த வழியாக சென்ற லாரி நின்று போனது.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், மருத்துவமனைக்கு அவசரமாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்கு வரத்தில் சிக்கி நின்றன.
சாலை விரிவாக்க பணிக்காக திருபுவனையில் இரண்டு புறமும் இருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இருந்த போதிலும் தற்போது சென்ட்ரல் திரையரங்கம் அருகில் செல்லும் சர்வீஸ் ரோடு மிகவும் குறுகலாக இருந்து வரும் நிலையில், இப்பகுதியில் இன்னும் சாலை விரிவாக்கம் செய்யாமல் உள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் இந்த குறுகிய சாலையில் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.
இந்த வழியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாகனங்கள் செல்கின்றன. திருபுவனை லிருந்து கடலூர் செல்லும் முக்கிய திருப்பமாக உள்ள இந்த சாலை தற்போது வாகனங்கள் செல்ல முடியாமல் குறுகிய சாலையாக அமைத்துள்ளனர்.
சர்வீஸ் ரோடு விரிவாக்க பணிக்காக இங்கு உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா..? அல்லது வேறு மாற்று வழியை சாலை போடும் ஒப்பந்தார்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று தெரியவில்லை. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இப்பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றி வாகனங்கள் செல்ல சாலை அமைக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.