மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சூரிய சக்தியை பயன்படுத்தி குறைந்த செலவில் சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளனர்.
- இந்த கண்டு பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் புதிய கண்டுபிடிப்பாக சூரிய சக்தியை பயன்படுத்தி குறைந்த செலவில் சார்ஜிங் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளனர்.
இதன் செயல்விளக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மயிலம் கல்விக்குழுமத்தின் இயக்குனர் செந்தில், கல்லூரி முதல்வர் ராஜப்பன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் முரளி கிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
இந்த கண்டு பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த புதிய கண்டுபிடி ப்பினை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஹரிகிருஷ்ணா சங்கர், கோகுல், மணிகண்டன், கவுதமன், சதாசிவன், ஆகியோர் இணைந்து உருவா க்கியது குறிப்பிடத்தக்கது.