கருத்தரங்கில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாதுகாப்பு அலுவலர் சுவுந்தர ராஜன் பேசிய போது எடுத்த படம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதிர்ப்பு கருத்தரங்கம்
- நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது.
- இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புறுத்தல்களிலிருந்து அவர்களை பாதுகாத்து வருகிறது.
அதன்படி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நெட்டப்பா க்கம் கருணாலயம் கிராம நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் கருணாலயம் கிராம நலச்சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
கருணாலயம் கிராம நலச்சங்க குடும்பஆலோசகர் சித்ரா வரவேற்று பேசினார். கருணாலயம் கிராம நலச்சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.