கைது செய்யப்பட்ட வாலிபர்
மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த கேரள வாலிபர் கைது
- விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தம்பேட்டமையின், கஞ்சா பதுக்கி வைத்திருந்தார்.
- புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார் சாவடியில் கடந்த சில நாட்களாக போலீசார் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர்.
அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தம்பேட்ட மையின், கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே உள்ள எம்.எஸ் ஹவுஸ் பனவூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் மகன் ரசல் (வயது 26) என்பது ெதரியவந்தது.
பெரிய முதலியார் சாவடியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்து கேரள மாநிலத்தில் போதை பொருளை வாங்கி வந்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.