புளூ ஸ்டார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- புளூ ஸ்டார் பள்ளி மாணவர்கள் 3 தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.
- உடற்பயிற்சி ஆசிரியை நளினி, உடற்பயிற்சி ஆசிரியர் பார்த்தசாரதி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரும்பாத்தபுரம் புளூ ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில், பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான டாக்டர்.மெய்வழி ரவிக்குமார் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார், துணை முதல்வர் சாலை சிவசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப்பதக்கம், 2 வெண்கல பதக்கங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.
மேலும் 4 வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று 13 முதல் பரிசுகளையும், 4 இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளையும் பெற்ற மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
மாவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற மாணவர்களும் பாராட்டப்பட்டனர். அேமச்சுர் அத்லெட்டிக் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான தடகள போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனம் மற்றும் மாகி பகுதியிலிருந்து 800-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகளில் புளூ ஸ்டார் பள்ளி மாணவர்கள் 3 தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும், 6 வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.
அவர்களையும் பள்ளியின் சார்பில் பாராட்டப் பட்டது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் பள்ளி மாணவர் சக்திவேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
பீகாரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பள்ளி மாணவர் வீரப்பிரணவ் கலந்து கொண்டு பள்ளிக்கு சிறப்பு சேர்த்தார். இந்த இருவரையும் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் டாக்டர்.மெய்வழி ரவிக்குமார் பாராட்டினார்.
மேலும் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அதிக பதக்கங்களை பெற்றதற்கு காரணமாக இருந்த புளூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அரேனா பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி ஆசிரியை நளினி, உடற்பயிற்சி ஆசிரி யர் பார்த்தசாரதி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.