புதுச்சேரி

கோப்பு படம்.

வரியில்லா பட்ஜெட் நாடகத்தை ரங்கசாமி நிறுத்த வேண்டும்-வையாபுரி மணிகண்டன் கடும் தாக்கு

Published On 2023-01-11 13:46 IST   |   Update On 2023-01-11 13:46:00 IST
  • புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும்.
  • இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும். பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டாலும், திட்டமிட்டபடி கட்டணத்தை மின்துறை உயர்த்துவதுதான் வாடிக்கை.

இந்த கட்டண உயர்வால் புதுவையில் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். புதுவை மக்கள் மாதந்தோறும் செலுத்தும் மின்கட்டணம் சுமார் ரூ.500 வரை கணிசமாக உயரும். இந்த கட்டண உயர்வை புதுவை மக்களால் ஏற்க முடியாது.

புதுவையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. புதிய தொழிற்சாலை களை கொண்டுவர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு கொத்தடிமைகள் போல கிடைத்த வேலைக்கு சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். புதுவை இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை, வேலைவாய்ப்பை அளிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் கண்துடைப்புக்காக ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இத்தகைய சூழலில் புதுவை மாநில மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் மின் கட்டண உயர்வை பொங்கல் பரிசாக அரசு அறிவித்துள்ளதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பரிந்துரை செய்த வீட்டு உபயோக கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டணம், குப்பை வரி, வீட்டுவரி, குடிநீர் வரி என தனித்தனியே வரி விதித்துவிட்டு, ஆண்டு தோறும் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதாக போலி கபட நாடகம் ஆடுவதை முதல்-அமைச்சர் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News