மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி.
- புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.
- மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை பாகூர் உழவர் உதவியகம் மற்றும் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், மணிலா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.
முகாமிற்கு, ஆத்மா திட்ட வட்டார வளர்ச்சி மேலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன், மணிலா சாகுபடியில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, சிறப்புறையாற்றினார்.
புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை வல்லுனர் ரவி, மணிலா உற்பத்தியில் நவீன உழவியல் தொழில் நுட்பங்கள் மற்றும் களை கட்டுப்பாடு என்ற தலைப்பிலும், பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார் மணிலா பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்'' என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர்.
காரைக்கால் ஜவகாலால் நேரு வேளாண் கல்லூரியி லிருந்து கள பயிற்சி பெற்று வரும் அன்புவானன் தலைமையிலான பாகூர் பகுதி மாணவ குழுவினர் ''மணிலாவில் இனக்கவர்ச்சி பொறி பயன்பாடு மற்றும் ஒரு வரிசை மணிலா விதை விதைக்கும் இயந்திரத்தின் செயல் விளக்கம் அளித்தனர்.
இம்முகாமில், பாகூர், இருளன்சந்தை, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், சோரியங்குப்பம், அரங்கனூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசா யிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன் நன்றி கூறினார்.