search icon
என் மலர்tooltip icon
    • விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார்.
    • இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் வர்ணனை பணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கவனித்து வருகிறார். நீங்கள் தானே டோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்' என அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த சூழலில் அது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


    இந்த கேள்விக்கு வித்திட்டவர் மகேந்திர சிங் டோனி தான். 2017 ஐபிஎல் சீசனின் போது அவர்தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் என வேடிக்கையாக சொல்லி இருந்தார். அப்போது வர்ணனை பணியை கவனித்த பீட்டர்சன், மைக்ரோ போன் மூலம் புனே வீரர் மனோஜ் திவாரியுடன் பேசி இருந்தார். அப்போதுதான் இது நடந்தது. இது நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் 'நீங்கள் தானே டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்' என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


    இந்த நிலையில் கடந்த 2011-ல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் போட்டியின் வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன். அந்த போட்டியின் முதல் நாள் அன்று டோனி பந்து வீசினார். அப்போது பீட்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதில் ஒரு பந்து பீட்டர்சனின் பேட்டை உரசி சென்றது போல இருந்தது. 'அவுட்' என டோனி முறையிட்டார். நடுவரும் அவுட் கொடுத்தார். டிஆர்எஸ் பரிசீலனையில் பீட்டர்சன் அவுட் இல்லை என உறுதியானது.

    ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல. சிறப்பாக பந்து வீசி உள்ளீர்கள் எம்.எஸ்" என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பீட்டர்சன்.


    விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார். 6 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 16 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடங்கும். இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் கைப்பற்றியதாகும். மேற்கிந்திய தீவுகள் வீரர் டி.எம். டவுலின் மட்டுமே.


    • பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது.
    • மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி நுழைந்தது. மற்ற 3 இடங்களை பிடிக்க 7 அணிகள் போட்டி போட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் 10 ஓவரில் 92 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அடுத்த 10 ஓவரில் சுமாராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணியை ஒருமுறை கூட மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதே இல்லை என்ற சோகம் தொடர்கிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 3 முறை மோதியுள்ளது. இந்த மூன்றிலுமே லக்னோ அணியின் வெற்றி வாகை சூடியுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 21-ந் தேதி ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது.

    • நவீன்-உல்-ஹக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.


    மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் கூட சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் வேகப்பந்து வீச்சாளரை "தி மேங்கோ கை" என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
    • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. அம்பதி ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 200 போட்டிகளில் விளையாடி 28.37 சராசரியுடன் 4312 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அவரது இரண்டாவது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


    பெண் குழந்தைகள் கிடைப்பது எல்லாம் வரம் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படமானது வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராயுடுவுக்கு சிஎஸ்கே வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளவும் சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

    இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    • என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
    • கடந்த போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இல்லை.

    லக்னோ:

    ஐபிஎல் தொடரின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 172 மட்டுமே எடுத்தது. இதனால் லக்னே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாது.

    மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மொஹ்சின் கான், வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றி பெற செய்தார். அதுவும் டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் என இருவரும் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இதை அவர் செய்திருந்தார்.

    இந்நிலையில் வெற்றி முக்கிய பங்கு வகித்த மொஹ்சின் கான் கூறியதாவது:-

    இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 10 நாட்கள் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். என் தந்தைக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன். அவர் இந்த ஆட்டத்தை பார்த்திருப்பார்.

    கடந்த போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இல்லை. இருந்தும் இந்த முக்கியமான போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம், கம்பீர் சார் மற்றும் விஜய் தஹியா சாருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் பயிற்சியின் போது செய்ததை ஆட்டத்திலும் செய்ய வேண்டும் என்பது தான் திட்டம்.

    ரன் அப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவரின் போது ஸ்கோர் போர்டை பார்க்கவில்லை. அந்த ஓவரில் நான் பந்தை மெதுவாக வீசினேன். இரண்டு பந்துகளுக்கு பிறகு யார்க்கர் வீசினேன்.

    என மொஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    • நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை.
    • ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.

    லக்னோ:

    ஐ.பிஎல் போட்டியில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.

    லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்சுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.

    மார்க்ஸ் ஸ்டோனிஸ் 47 பந்தில் 89 ரன்னும் (4 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் குணால் பாண்ட்யா 42 பந்தில் 49 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பெகரன்டார்ப் 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இஷான் கிஷன் 39 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 25 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் டேவிட் 19 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பிஷ்னோய் , யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும் , மோஷின்கான் 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.

    மும்பை இந்தியன்ஸ் 6-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம். ஆடுகளத்தை நன்றாக அறிந்துதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன்.

    178 ரன்கள் இலக்கை எடுக்ககூடிய பிட்ச் ஆகும். எங்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் முடிவு சரியாக அமையவில்லை.

    எங்களது பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.

    இதுவே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது ஆட்டம் பாராட்டுக்குறியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    4-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    லக்னோ 15 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 20-ந் தேதி எதிர்கொள்கிறது.

    • பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இந்திய ஹாக்கி அணியின் முன்னுரிமையாக உள்ளது என கிரேக் புல்டான் தெரிவித்தார்.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    புதுடெல்லி:

    இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளரான தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேக் புல்டான் நேற்று காணொலி மூலம் அளித்த பேட்டியில், 'ஆசிய மண்டலத்தில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் இலக்குகளில் முதன்மையானதாகும். அத்துடன் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன் பதக்க மேடையை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    அணியில் போதுமான அனுபவத்தை உருவாக்கி, ஒவ்வொரு வீரருக்கும் பொருந்தக்கூடிய ஆட்ட திட்டத்தை வைத்து இருந்தால் நீங்கள் சர்வதேச போட்டியில் இறுதிசுற்றுக்குள் நுழைவதுடன் பதக்கத்தையும் வெல்ல முடியும். இந்த ஆண்டு இறுதியில் அரங்கேறும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது எங்களது முன்னுரிமையாகும்.

    அதனை எட்ட புரோ லீக், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம். நாங்கள் சிறந்த அணி கிடையாது. ஆனால் ஒரு நல்ல அணி. அதேநேரத்தில் மற்ற அணிகள் எதிர்கொள்ள ஒரு கடினமான அணியாகும். நமது அணி இருக்கும் நிலைக்கும், உலக தரவரிசையில் முதல் 2 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை குறைக்க நாம் உழைக்க வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.

    • அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது.
    • இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் தற்போது, ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    • 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    ஐதாரபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள முகமது சிராஜ் புதிய வீட்டிற்கு விராட் கோலி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியாகியுள்ளன. இதைவிட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரேயொரு முறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

     

    இந்த நிலையில், ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு விராட் கோலி உள்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

    சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

    வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து டோனி ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
    • ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் டோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து டோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. டோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை கேப்டன் டோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறி உள்ளார்.

    டோனி ஓய்வு பெறுவாரா என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள முகமது கைப், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதை டோனி பல முறை உணர்த்திவிட்டதாகவும், அடுத்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்றே தனக்கு தோன்றுவதாகவும் கைப் கூறி உள்ளார். கவாஸ்கர் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது, டோனியின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் கைப் பேசி உள்ளார்.

    ×