என் மலர்
- ஐதராபாத் அணிக்கு எதிராக சுப்மன் கில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை கில் நேற்று பதிவு செய்தார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியும் குஜராத் அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிக்சர் அடிக்காமல் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை கில் முறியடித்துள்ளார்.
2010-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது டெல்லி அணிக்கு எதிராக 23 பந்துகளில் எந்த சிக்சரும் இல்லாமல் சச்சின் அரைசதம் அடித்திருந்தார். கில் நேற்றைய போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஒட்டுமொத்தமாக, அவர் இந்த சீசனில் 13 போட்டிகளில் 145-க்கும் அதிகமான ஸ்டிக்-ரேட்டில் 576 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கில் 50 ரன்களை எட்டிய பிறகு தனது இன்னிங்சில் மேலும் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடித்தார். அவர் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
- லக்னோ அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் உள்ளது.
- மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
லக்னோ:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த சீசனில் லக்னோ அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி இனி வரும் தனது 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டால் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற முடியும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் காணும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் நிகர 'ரன்-ரேட்' பிரச்சினையின்றி அடுத்த சுற்றுக்குள் கால்பதிக்க வாய்ப்புள்ளது.
வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகியதால் அந்த அணியை ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா வழிநடத்தி வருகிறார். முந்தைய ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியை சந்திக்கிறது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ் (4 அரைசதத்துடன் 361 ரன்கள்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்குரும், ஆல்-ரவுண்டராக கேப்டன் குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 5 முறை சாம்பியனான மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.
அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்வதுடன் 'டாப்-2' இடங்களுக்குள் முன்னேற முடியும். இதில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டியது வரும். முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி தற்போது நல்ல பார்மை எட்டியிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு இருக்கும் அந்த அணி முந்தைய 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த உத்வேகத்துடன் உள்ளது.
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 479 ரன்கள்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், கேப்டன் ரோகித் சர்மா, நேஹல் வதேராவும், பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், ஆகாஷ் மாத்வாலும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமானதாகும். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வதை பொறுத்தே அணியின் வெற்றி அமையும் எனலாம். ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு தடவையும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது.
- நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார்.
- சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி சும்பன் கில் சதத்தால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
அதில், உனக்கு திறமை இருக்கிறது. அடுத்த தலைமுறையினரை நீ வழி நடத்தி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.
- குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.
- புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன.
குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் எதிரணி ஜோடி சுப்மன் கில் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆவர். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.
ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கூட, இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இது நடந்துள்ளது. சையது முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகாவின் கருண் நாயர் (111), தமிழகம் சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் (5/30) இந்த சாதனையை படைத்தனர்.
2021-ல் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா இடையேயான டி20 சர்வதேச ஆட்டத்தில் இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடந்தது. பெல்ஜியத்தின் சபர் ஜாகில் (100*) மற்றும் ஆஸ்திரியாவின் அகிப் இக்பால் (5/5) ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்பட்டது.
- குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின.
சென்னை:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.
இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் ஆட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்ப டையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் நேற்றுடன் 62 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி முதல் 2 இடங்களை பிடிப்பது உறுதி செய்யப்பட்டது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின. பிளே ஆப் சுற்றின் 3 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்
டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை 20-ந் தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் சென்னை 17 புள்ளியுடன் தகுதி பெறும்.
சி.எஸ்.கே. தோற்றால் மற்ற அணிகளின் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே பிளே ஆப் சுற்று வாய்ப்பு தெரியவரும். ஆனாலும் முதல் 4 இடங்களுக்குள் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. டெல்லியை வீழ்த்தி "குவாலிபயர் 1" போட்டியில் ஆடுவதை சி.எஸ்.கே. இலக்காக கொண்டுள்ளது.
14 புள்ளிகளுடன் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு 2 ஆட்டம் இருக்கிறது. லக்னோவுடன் இன்றும் , ஐதராபாத்துடன் 21-ந் தேதியும் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் முதல் 2 இடங்களை பிடிக்கும்.
ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்று விடும். இரண்டிலும் தோற்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அமையும். நிகர ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 13 புள்ளிகளை லக்னோ பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது.
கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர் கொள்கிறது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அந்த அணி 17 புள்ளியுடன் தகுதி பெறும். ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து இருக்கிறது. இரண்டிலும் தோற்றால் அந்த அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.
பெங்களூர் அணி 12 புள்ளியுடன் இருக்கிறது. 2 ஆட்டம் எஞ்சியுள்ளது. 18-ந் தேதி ஐதராபாத்துடனும், 21-ந் தேதி குஜராத்துடனும் மோதுகிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளை பெறும். அந்த அணியின் நிகர ரன் ரேட்டும் நன்றாக இருக்கிறது. அந்த அணி மோதும் ஆட்டம் கடைசியாக வருவதால் அதற்கு ஏற்ற வகையில் விளையாடலாம்.
12 புள்ளியுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. டெல்லி அணியுடன் நாளையும், ராஜஸ்தானுடன் 19-ந் தேதியும் மோதுகிறது. இந்த இரண்டிலும் வென்றால் பஞ்சாப் 16 புள்ளிகளை பெறும். அந்த அணி தனது நிகர ரன் ரேட்டை உயர்த்தினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.
தொடக்கத்தில் முன்னேறிய நிலையில் இருந்த ராஜஸ்தான் தற்போது பரிதாப நிலையில் உள்ளது. 12 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினமானதே. மும்பை, லக்னோ அணிகள் இரண்டிலும் தோற்க வேண்டும்.
ராஜஸ்தானை போன்ற நிலைதான் கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் லக்னோவை சந்திக்கிறது. கொல்கத்தா அணியும் பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே.
- ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
- பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.
31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.
இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
- ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
- கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.
துபாய்:
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு விதிகளை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் போட்டி விறுவிறுப்பாக மாறும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதன்படி ஐசிசி 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட ஐசிசி விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதி 1: கள நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும்.
விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். அந்த ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேரும். இந்த 3 விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி அமலுக்கு வரும் எனவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்த விதிகள் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. தொடரில் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ஜூன் 4-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஜூன் 7-ம் தேதியும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்று வீரர்களாக 4 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்:
ஹஷ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அமகது, அப்துல் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பரித் அகமது மாலிக்.
மாற்று வீரர்கள்: குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்.
- கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும்.
- தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கிரிஸ்னேஸ்வரர் கோவில் அல்லது குஷ்மேஸ்வரர் கோவில் எனப்படும் கோவில் ஒரு புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்கபாத்தில் உள்ள தௌலதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இக்கோவில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் இங்கே திருத்த வேலைகளைச் செய்வித்தார். வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலையும், காயாவில் உள்ள விஷ்ணு பாத கோவிலையும் திரும்பக் கட்டுவித்தவரும் இவரே ஆவார்.
- புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான்.
- இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.
பீமாசங்கர் கோவில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இக்கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக்கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை.
பீமாசங்கரர் கோவில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக்கோவில் 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது.
புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக்கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.
- ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
மல்லிகார்ஜுனர் கோவில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
தோற்றம்
இக்கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோவில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது.
அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
- இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன.
- இதில் சி.எஸ்.கே. 15-ல் ராஜஸ்தான் 13-ல் வெற்றி பெற்றுள்ளன.
ஜெய்ப்பூர்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் , நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
ஜ.பி.எல். கோப்பையை 4 முறை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
சேப்பாக்கத்தில் நடந்த 2-வது போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. மும்பையில் நடந்த 3-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் 3 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்றது. பெங்களூரில் நடந்த 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 ரன்னில் வென்றது.
சேப்பாக்கத்தில் நடந்த 6-வது போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 7-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சையும் வீழ்த்தியது.
சி.எஸ்.கே. அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8- வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்ப்பூர் மான்சிங ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை அணி ஏற்கனேவ ராஜஸ்தானிடம் இந்த சீசனில் தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்குமா? என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது. இதனால் சி.எஸ்.கே. தனது அதிரடியை தொடர்ந்து வெளிப் படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ராஜஸ்தானை பழிதீர்த்து சி.எஸ்.கே. 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் கான்வே (314 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (270), ரகானே (209) ஷிவம்துபே (184), ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் கேப்டன் டோனி, அம்பதிராயுடு, ஜடேஜா, மொய்ன் அலி அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
பந்து வீச்சில் துஷ்கர் தேஷ் பாண்டே (12 விக்கெட்), ஜடேஜா (10 விக்கெட்) மொய்ன் அலி (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பதினா, தீக்ஷனா ஆகியோரும் நேர்த்தியாக பந்து வீசக்கூடியவர்கள்.
ராஜஸ்தான் அ ணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ராஜஸ்தான் தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது.
அந்த அணியில் பட்லர் (244 ரன்), ஜெய்ஷ்வால் (227 ரன்), ஹெட்மயர் (189ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (181 ரன்), படிக்கல் (165 ரன்), யசுவேந்திர சாஹல் (12 விக்கெட்), அஸ்வின, டிரென்ட் போல்ட் (தலா 9 விக்கெட்), சந்தீப் சர்மா (7 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே. 15-ல் ராஜஸ்தான் 13-ல் வெற்றி பெற்றுள்ளன.