என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கடைசி பந்தை வீசுவதற்கு முன்பே கண்கலங்கிய பாண்ட்யா: முத்தமிட்ட ரோகித்- வீடியோ
- அதிரடியாக விளையாடிய கிளாசன் மற்றும் மில்லர் விக்கெட்டை பாண்ட்யா வீழ்த்தினார்.
- இதனால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் விளையாடினர்.
இந்நிலையில் 17-வது ஓவரை பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கிளாசன் 52 (27) விக்கெட்டை வீழ்த்தி திருப்பி முனையை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் 1 விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.
கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் முதல் பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்தார். ஆனால் லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-வது முறையாக முத்தமிட்டுள்ளது.
இந்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது. இதனால் கடைசி பந்தை போடுவதற்கு முன்பே ஹர்திக் பாண்ட்யா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். கடைசி பந்தை போட்ட பிறகும் அவர் அழுதார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோகித் அவருக்கு முத்தமிட்டு கட்டியணைத்தார். போட்டி இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்