என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
![உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்தது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்தது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/28/1753272-aussie1.jpg)
ஆஸ்திரேலியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்தது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்தது.
- தரவரிசையில் இந்தியா நான்காம் இடத்தில் நீடிக்கிறது.
துபாய்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.
இந்தப் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்நிலையில், போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் 70 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும், 52.08 சதவீத புள்ளிகளுடன் இந்திய அனி 4-வது இடத்திலும், 51.85 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)