என் மலர்
செய்திகள்
அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு நீட்தேர்வு பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசை கண்டித்தும், வன்முறையை தூண்டும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு அரியலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக கவுதமன் இன்று அரியலூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இதற்கான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இயக்குனர் கவுதமன் மீதான 19 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு, அவர் அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #Gowthaman
மதுரை:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கைத்தறி ஆதவுத் திட்டம் குறித்து கைத்தறி நெசவாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, கருத்துகளை கேட்பதற்காக காஞ்சீபுரம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
அதேபோன்று இன்று மதுரையில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் வீரராகவ ராவ், கதர் துறையின் அரசு முதன்மை செயலர் பணீந்திரரெட்டி , கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது, தமிழகத்தில் மிக கவுரவமான தொழில் கைத்தறி தொழில் மட்டுமே.
இந்த ஆண்டும் நெசவாளர் மக்களுக்கு பசுமை வீடு மற்றும் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
அரசின் கைத்தறி துறை இன்னும் ஒரு சில கஷ்டத்தை சந்திக்க உள்ளது. அது என்னவென்றால் தரமான பட்டு மற்றும் பருத்தி ஆகியவற்றின் உண்மை தன்மை மக்களுக்கு புரியாமல் உள்ளது. கலப்பட பொருட்களை தான் மக்கள் விரும்புகிறார்கள்.
ஸ்மார்ட் கார்டு வந்த பின் இலவச வேஷ்டி சேலைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கைத்தறி என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்துள்ளது.
கூட்டம் முடிந்ததும் அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு ஆதரவாக எந்த திட்டம் வந்தாலும் ஆதரிப்போம், மாறாக பாதிப்பாக வந்தல் மத்திய அரசை எதிர்ப்போம் இளைஞர்கள் மேலைநாட்டின் உடைகளை விரும்பி அணிவதால் புடவை விற்பனை குறைகிறது.
அதற்கு ஏற்றவாறு கைத்தறியிலும் சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை தயாரிக்க மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதன் முதலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது அ.தி.மு.க. அது போல தற்போதும் தொடங்கி இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.#MinisterOSManian
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கை முதலில் கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்த நிலையில், பின்னர் உயர்நீதிமன்ற ஆணைப்படி சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஊழல் குறித்த வழக்குகளில் குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் நோக்குடன் சி.பி.ஐ விசாரிக்கும் நிலையில், ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சட்டவிரோத பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்துவது வழக்கமாகும்.
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவினரும் இந்த ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் குட்கா ஊழல் குறித்த சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில், பெயர் தெரியாத அதிகாரிகள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ள நிலையில், அதனடிப்படையில் விசாரிக்க அமலாக்கப்பிரிவால் முடியவில்லை.
மாறாக, கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்களும், அவர்களின் விவரங்களும் இடம் பெற்றிருப்பதால் அதனடிப்படையில் மட்டுமே அமலாக்கப் பிரிவு விசாரிக்க முடியும். அதற்காக, குட்கா வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்கும்படி அமலாக்கப்பிரிவு விடுத்த வேண்டுகோளைத் தான் தமிழக காவல்துறை நிராகரித்துள்ளது. இதற்காக காவல் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை.
குட்கா ஊழல் குறித்த முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஏற்கனவே சிபி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதால், இன்னொரு மத்திய அமைப்பிடம் அந்த ஆவணங்களை வழங்க முடியாது என தமிழக காவல்துறை கூறிவிட்டது.
ஒரு வழக்கு குறித்த ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் வழங்கிவிட்டதால், அமலாக்கப்பிரிவிடம் வழங்க முடியாது என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.
கடந்த காலங்களில் ஒரே வழக்கின் ஆவணங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மத்திய அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இந்த வழக்கு ஆவணங்களின் நகல்கள் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் இருப்பதால், அதை அமலாக்கப்பிரிவினரிடம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், ஆவணங்களைக் தராமல் அரசு அலைக்கழிப்பதற்கு காரணம் விசாரணையை முடக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.
குட்கா ஊழல் வழக்கு விசாரணையை முடக்கும் முயற்சியில் தான் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த எம்.டி.எம் குட்கா ஆலைகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், குட்கா விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.
அவற்றை 2016 ஆகஸ்ட் மாதமே தமிழக அரசி டம் ஒப்படைத்த வருமான வரித்துறை, அவற்றின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியது.
ஆனாலும், ஓராண்டுக்கும் மேலாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீண்ட நெடியப் போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த விசாரணையையும் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது குட்கா ஊழல் குறித்த அமலாக்கப்பிரிவு விசாரணையை அரசு தடுக்கிறது.
அமலாக்கப்பிரிவு விசாரணை தீவிரமடைந்தால் இந்த ஊழலில் மற்றவர்களுக்கு உள்ள தொடர்பும் அம்பலமாகிவிடும் என்பதால் தான் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதை அரசே செய்வது மன்னிக்க முடியாததாகும்.
குட்கா ஊழலை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் வருமானவரித்துறையிடமும், சி.பி.ஐ.யிடமும் உள்ளன.
குட்கா வழக்கு குறித்த ஆவணங்களை அமலாக்கப்பிரிவுக்கு கொடுக்காமல் மறுப்பதன் மூலம் இந்த வழக்கில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் சொத்துக்கள் முடக்கப்படுவதை தாமதப்படுத்த முடியுமே தவிர தடுக்க முடியாது. ஆனால், ஆவணங்களை கொடுக்க மறுப்பது விசாரணையை தடுக்கும் குற்றமாகிவிடும்.
எனவே, அத்தகைய பழிக்கு ஆளாகாமல், குட்கா ஊழல் குறித்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவிடம் கையூட்டு தடுப்புப் பிரிவு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Gudkacorruption #Ramadoss
சேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாநகரில் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதனால் கொசுதொல்லை, போக்குவரத்து நெரிசல் குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அரசு போதிய நிதி ஒதுக்காததால் மாநகர நிர்வாகம் கடன் வாங்கி பணிகளை செய்து வருகிறது.
மேட்டூர் உபரி நீர்த்திட்டம், தோணிமடுவு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுமாறு 40 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.
சேலம்-சென்னை இடையேயான 8-வழி விரைவு பசுமைச்சாலை பொது மக்களுக்காக அமைக்கப்படவில்லை. இந்த சாலை யாருக்குமே பயனில்லை. 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, அதன் பின்னர் தான் 8 வழிச்சாலை போட முடிவு செய்து இருக்கிறார்கள்.
நான், விவசாயிகளிடம் கருத்து கேட்டேன். அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். யாருமே தானாக முன்வந்து நிலம் கொடுப்பதாக கூறவில்லை. அரூர் அருகே முத்தானூர் கிராமத்தில் 8-வழிச்சாலைக்காக பள்ளிக்கூடம் இடிக்கப்படுகிறது. அந்த மாணவர்கள் என்னை சந்தித்து அழுதனர். இது எனக்கு வேதனை அளிக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களின் நிறுவனங்கள் சாலைக்காக இடிக்கப்படவில்லை. 1½ லட்சம் மரங்கள் அழிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகுவேன். கிருஷ்ணகிரி வழியாகவும், அரூர்-திருப்பத்தூர் வழியாகவும், உளுந்தூர்பேட்டை வழியாகவும் சென்னைக்கு செல்ல 3 பாதைகள் இருக்கிறது. 8-வழிச்சாலை தேவையில்லை. இதில் ஏதாவது ஒரு சாலையை விரிவுப்படுத்தலாம்.
நடிகர் ரஜினி 8-வழிச்சாலை திட்டம் தேவையானது என சொல்கிறார். அவருக்கு 8 வழிச்சாலை திட்டத்தை பற்றி சரியாக தெரியாது.
உண்மையான வளர்ச்சி வேண்டும் என்றால் சென்னை-கன்னியாகுமரி கடற்கரை வழியாக இருக்கும் சாலையை 8-வழிச்சாலையாக மாற்றலாம்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஒரு வாரத்திற்கு முன்பாக மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். வேண்டும் என்றே காலம் தாமதம் செய்கின்றனர். மணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது.
இந்த காண்ட்ராக்ட் நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
முதல்வராக இருப்பவர், தனது சொந்தக்காரர்களுக்கு டெண்டர் வழங்குவது தவறு. இது குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும.
இருதயம், நுரையீரல், கல்லீரல் இங்குள்ளவர்களுக்கு பொருத்தாமல் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பொருத்துகிறார்கள். இதில் அதிகபட்சமாக ரூ.12 கோடி வரை லஞ்சம் கைமாறுகிறது. இதில் சென்னையில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருக்கிறது. இது குறித்தும், முட்டை கொள்முதல் ஊழல் குறித்தும் சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும்
சென்னையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #AnbumaniRamadoss
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.
இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.
வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.
தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.
தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.
நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.
இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.
தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
திருக்கோவிலூர்:
தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்முடி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பெண் விடுதலைக்கு வித்திட்டவர் பெரியார். அவரது கனவுகளை சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. உதாரணமாக பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சமத்துவபுரம் போன்ற எண்ணற்ற திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் அவர் முதன்மையாக விளங்கினார்.
ஒருகாலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி இன்று ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வை ஏன் பல மாநில முதல்வர்கள் எதிர்க்கவில்லை என கேட்டபோது அவர்கள் கூறுகையில் எங்கள் மாநிலத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. எனவே நீட் தேர்வு வந்தால் எங்கள் மாநில பிள்ளைகள் உங்கள் மாநிலத்தில் படிப்பார்கள் என்றனர். ஆனால் நமது மாநில பிள்ளைகளின் படிப்பு உரிமை போகின்றதே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வுக்கு பினாமி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.
மாநில உரிமை பறிபோவது குறித்து எதிர்த்து பேச துணிவு இல்லை. ஓ.பி.எஸ்.ஐ. போல் இ.பி.எஸ்.சும் விரைவில் தியானத்தில் ஈடுபடுவார்.
8 வழிச்சாலை தொடர்பான அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும். இந்த திட்டத்தால் எவ்வளவு பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும் என்ற நிலையை இந்த அரசு உணரவில்லை. இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களை சந்திக்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அரசு கைது செய்து அடக்குமுறையை கையாளுகின்றது. ஒரு திட்டத்தை கொண்டு வரும் முன்னர் அது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதனை செயல்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை குறித்து தெளிவான அறிக்கை இல்லை. அதில் யார்? யாரை சந்தித்து எந்த எந்த அதிகாரிகள் பேசினார்கள் என்ற விபரங்கள் சரியாக இல்லை. அந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும்.
தமிழகத்தில் சாலைகள் அமைப்பதில் ரூ.1500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக முதல்வர் மீது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு சொல்லியிருக்கின்றார். அதற்கு இதுநாள்வரை பதில் இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. இந்த அரசை மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர்.
சத்துணவு, முட்டை, பருப்பு என பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கும் உணவில்கூட ஊழல் செய்யும் இந்த ஆட்சியை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். அதே சமயம் விரைவில் தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினரும் தமிழகத்தில் தீவிரவாதம் தோன்றியிருப்பதாகவே பேசுகின்றனர். ஆட்சி பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு யார் தீவிரவாதி, சமூக விரோதி என்று தெரியவில்லையா? அதனை யார்? யார்? என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் தான் தீவிரவாதம் என்பேன்.
தமிழகத்தில் தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு அடக்குமுறையில் ஈடுபடுவதுடன், மக்களை அச்சத்திற்குள்ளாக்குகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரூர் வட்டம், முத்தானூர் (எம்.தாதம்பட்டி) கிராமத்தில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தருமபுரி பா.ம.க. எம்.பி. டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
பசுமை வழியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ.40 முதல் ரூ.80 ஆயிரமும், விவசாய நிலங்களுக்கு ஒரு ஹக்டேருக்கு ரூ. 9 கோடி வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை அருகேயுள்ள நிலங்களுக்கு கூட அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையிலும் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தற்போது மாநில அரசு ரூ.105யை வழங்கி வருகிறது. ஆனால் பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது.
பசுமை வழிச்சாலை அமைந்தால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் தான் நிலத்தடியில் சிறு பாலங்கள் இருக்கும். சாலையின் குறுக்கே மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. சாலையின் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்படும்.
அதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலும் 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையில் செல்ல வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். பசுமை வழி விரைவுச் சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எட்டு வழி பசுமை விரைவுச் சாலையால் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணத் தொலைவில் குறையும். பசுமை சாலையில் சென்னைக்கு சென்றால் 5.30 மணி நேரம் ஆகும். ஆனால், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக செல்லும் சேலம் முதல் சென்னை வரையிலான சாலையில், சென்னைக்கு சென்றால் 4.30 மணி நேரம் ஆகும். எனவே, எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, அதற்கு மாற்றாக வாணியம்பாடி வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான தார் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.
பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக்கு பிறகு, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #ChennaiSalemGreenExpressway
திருவண்ணாமலை:
சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அதை தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 வழி பசுமை சாலைக்காக பல்வேறு எதிர்ப்புகள், போராட்டங்களை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் நடத்தினாலும் அதனை கண்டு கொள்ளாமல், மக்களின் கோரிக்கைகளை கேட்காமல் மத்திய, மாநில அரசுகள் பிடிவாதமாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை தொழில் வளமுள்ள மாநிலமாக வலுப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறதா? அல்லது மாநில அரசு முனைப்பு காட்டுகிறதா? என்று தெரியவில்லை.
8 வழி சாலையின் அவசியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 8 வழி சாலைக்காக வளங்கள் அழிக்கப்படுவது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களை காவல் துறையினரை கொண்டு கைது செய்வது, சமூக விரோதிகள் என கூறுவது, குண்டர் சட்டத்தில் அடைப்பது என்பது கண்டனத்துக்குரியது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின் இதனை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு காவிரி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், தேனி பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தையும், தற்போது 5 மாவட்டங்களில் 8 வழி சாலை திட்டத்தையும் அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் நிலையில் மத்திய அரசு மாநில அரசின் மீது திட்டங்களை திணிக்கிறது. இதை எதிர்த்து பேச வலுவில்லாத நிலையில் தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க. செயல்படுகிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறுகின்றனர். தமிழக அரசை பலவீனப்படுத்தும் வகையில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. குறிப்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தற்போது இணக்கம் இல்லை என்பது வருமான வரித்துறையினர் நடத்துகின்ற சோதனையில் இருந்து தெரிகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் வகையிலும், தமிழக அரசியலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.
இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள கசப்பை வெளிப்படுத்துவதாகும். எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தி அவரை மாற்ற அல்லது தமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அமித்ஷாவின் கருத்தின் அடிப்படையில் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி கலைக்க முயற்சிக்கலாம். மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
8 வழி சாலை குறித்து ரஜினி ஆதரித்து பேசுவது என்பது அதிர்ச்சியான செய்தியல்ல. தி.மு.க.வுடனான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பயங்கரவாத இயக்கங்கள் ஏதுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #admkgovt #incometaxraid
பா.ம.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை அடையாறில் நடந்தது. கூட்டத்துக்கு வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அடையாறு வே.வடிவேல் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஜி.வி.சுப்பிரமணியன், சகாதேவன், சிவக்குமார், ஜெனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மக்களின் உரிமைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஊடகங்கள் மூலம் தான் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தொடர்ந்து அரசின் ஊழல்களை, தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.
இப்போது இரண்டு நடிகர்கள் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் கட்சி ஆரம்பித்து பெயரும் சூட்டி விட்டார் (கமல்). இன்னொருவர் எப்போது கட்சியை தொடங்குவார் என்பது அவருக்கே தெரியாது (ரஜினி).
நிச்சயமாக நான் சொல்வேன். அவர்கள் இருவரும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டு எங்களுக்கு நடிக்கும் திறமை உண்டு. ஆனால் ஆளும் திறமை அன்புமணியிடம்தான் உள்ளது. அவரே ஆட்சிக்கு வரட்டும் என்று சொல்லி விடுவார்கள்.
ஆளத் தகுதியானவர்கள் யார் என்று பொதுமேடையில் விவாதிக்க வேண்டும். இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரே கட்சி பா.ம.க. இந்தியாவில் 2 ஆயிரத்து 44 கட்சிகளும் தமிழகத்தில் 230 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக உள்ளன. இவைகளில் இருந்து மாறுபட்ட ஒரே கட்சி பா.ம.க.
ஆண்ட கட்சிகளை ஒதுக்குங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.
சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு ரஜினி ஆதரவு என்கிறார். அதைப்பற்றி அவருக்கு என்ன தெரியும். சேலத்துக்கு ஏற்கனவே 3 வழிகள் உள்ளன. அந்த சாலைகளை விரிவுபடுத்தினால் போதும். விவசாய நிலங்களை அழித்து இந்த சாலை அமைக்க வேண்டும் என்று யார் கேட்டது? நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையை கன்னியாகுமரி வரை 8 வழி சாலையாக விரிவுபடுத்துங்கள். யாரும் எதிர்க்கப் போவதில்லை. இதன்மூலம் தென் மாவட் டங்களும் வளர்ச்சி பெறும்.
3 சாலைகள் இருக்கும் ஊருக்கு புதிதாக ஒரு சாலை எதற்கு? அதுவும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் சில இடங்களில் இந்த சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும்.
இந்த சாலையை அமைப்பதில் அப்படி என்ன எடப்பாடி ரகசியமோ தெரியவில்லை. திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.
8 வழி சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இந்த சாலை வரப் போவதில்லை
தற்போது தமிழ்நாடு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. டாக்டர்களால்தான் காப்பாற்ற முடியும். ஆக்டர்களால் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திலகபாமா, வடிவேல் ராவணன், ராமமுத்துக்குமார், வக்கீல் பாலு, மு.ஜெயராமன், வி.ஜெ.பாண்டியன், ஜமுனா கேசவன், ஈகை தயாளன், ரா.செ.வெங்கடேசன், வி.எஸ்.கோபு, டி.எஸ்.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #PMK #Ramadoss
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை ஒரு ஆங்கில நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்கு மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்கு காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான்.
அதிலும் குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல்- வேதியியல் பாடங்களில் 9-க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதை விடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக் குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத் திருப்பவர்களால் நிகர் நிலைப் பல்கலைகளில் சேர முடிந்துள்ளது. அப்படியா னால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா... கோடிகளா? என்ற வினா எழுகிறது.
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம் எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவீதம் மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம் எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.
உண்மையில் நீட் தேர்வு 2010ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாட வாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது தான் மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.
இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது. ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை.
எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #Ramadoss #NEET
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சியில் தான் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றன. 100 ரூபாய் கட்டுமானச் செலவு செய்யவேண்டிய இடத்தில் 116 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் கட்ட முதலில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் அதைவிட பலகோடி ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது.
முட்டை கொள்முதல் தொடர்பான மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் விடுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முட்டை கொள்முதலுக்கு 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் எவ்வாறு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ய முடியும். முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #TNEggsTender #Jayakumar