search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • 21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன. இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாக கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்காவின் எலான் மஸ்க் தலைமையிலான DODGE(செயல்திறன்) துறை அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    மேலும் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், "21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது, எங்களுக்கும் வாக்கு சதவீத அதிகரிப்பு வேண்டும் அல்லவா?" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010-12 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.

    இதை உறுதோபடுத்தும் வகையில் "2008 ஆம் ஆண்டு முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு திட்டத்திற்கும் USAID இலிருந்து இந்தியா எந்த நிதியையும் பெறவில்லை" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் ஒரு ஆய்வறிக்கையை நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

    இதைத்தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரசை பாஜக விமர்சித்தது. ஆனால் அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி இதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையிலும், 'DODGE வெளியிட்ட பொய்யால் இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது' அமெரிக்கா இந்தியாவுக்கு அதுபோன்ற எந்த தேர்தல் நிதியும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கட்டுரைகளை மேற்கோள் காட்டி மோடி மற்றும் டிரம்ப் தொடர்பை குறிப்பிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.  

    நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, இது இரண்டு நண்பர்களுக்கு (மோடி - டிரம்ப்) இடையிலான விவகாரம். இந்திய தேர்தலில் அழுத்ததை ஏற்படுத்த மோடிக்கு பணம் அனுப்பியதை டிரம்ப் கூற்று நிரூபிக்கிறது. சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன.

    இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா என்று தற்போது கேள்வி எழுகிறது. மோடியை பாஜக பிரதமர் பிம்பமாக மாற்றியது, ஆம் ஆத்மியின் திடீர் வளர்ச்சி ஆகியவை சந்தேகமளிக்கிறது.

    எந்தெந்த கட்சிகள், அமைப்புகள் இந்த நிதியை பெற்றன என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆர்எஸ்எஸ்- பாஜக வலையமைப்பு விநோதமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. USAID மூலம் கடந்த 2021 மற்றும் 2024 நிதியாண்டுகளில் 650 பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கான நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
    • இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    புதுடெல்லி:

    பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் புதிய வழக்கை பதிவு செய்தது. இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

    தனக்கு எதிராக குற்ற வழக்கு தொடர அனுமதி பெறவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று நடைபெற்றது.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    • 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
    • யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாக கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, காங்கிரசை விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010-12 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழக SRCC இலக்கிய நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய அவர்,

    "டிரம்ப் நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட சில தகவல்கள் கவலைக்குரியது. ஒரு அரசாங்கமாக, நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். உண்மைகள் வெளிவரும் என்று நான் கருதுகிறேன்.

    USAID இங்கு நல்லெண்ணத்துடன், நல்லெண்ண நடவடிக்கைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது.

    இப்போது, அமெரிக்காவிலிருந்து தீய நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.இது நிச்சயம் கவலையளிக்கிறது. அதில் ஏதாவது இருந்தால், அதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாடு சில தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • உடைந்த சீட்களில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை.
    • இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி சீட் சேதமடைந்து இருந்தது.

    இதுதொடர்பாக, சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த சீட் கொடுக்கப்பட்டதாக பதிவிட்டார்.

    அதில், நான் போபாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்து இருந்தது. சக பயணிகள் இருக்கையை மாற்றி அமரும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.

    டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?

    ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • சக்தி காந்த தாஸை நியமனம் செய்து அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
    • சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவரது நியமனத்தை அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பதவி காலமும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார்.

    தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
    • நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்

    தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான ரேகா குப்தா நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) டெல்லி முதல்வராக பதவியேற்றார்.

    இதைத்தொடர்ந்து நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்துள்ளார். பிரதமர் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.

    பதவியேற்ற பிறகு அவர் பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக டெல்லி பட்ஜெட் தாக்கலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி மேம்பாடு குறித்து இருவரும் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    • மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.

    1968-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதை குறிக்கும் வகையில் மொரீஷியசில் ஆண்டுதோறும் மார்ச் 12-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி நடைபெற உள்ள 57-வது தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம் கூலம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது எனது அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி நமது தேசிய தின விழாவில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

    இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் போர்ட் லூயிஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன்.
    • மோசமான இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை

    போபால் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இன்று நான் போபாலில் இருந்து டில்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். அதற்காக நான் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கையில் அமர்ந்தபோது தான் அது சேதமடைந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவந்தது.

    சக பயணிகள் இருக்கையை மாற்றி நல்ல இருக்கையில் அமரும்படி என்னை வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் நான் ஏன் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.

    டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை.

    பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?

    ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    • கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.
    • சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியின் சிறப்புப் பிரிவு போலீசார் வடகிழக்கு டெல்லியில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் பிரபல தாதா ஹாசிம் பாபாவின் மனைவி சோயா கானை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 270 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைபற்றப்பட்டது.

    போலீசார் விசாரணையில் சோயா கான் பற்றி பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    டெல்லியை கலக்கி வந்தவர் பிரபல தாதாவான ஹாசிம் பாபா, இவருடைய 3-வது மனைவி சோயா கான். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஹாசிம் பாபாவை திருமணம் செய்து கொண்டார்.

    கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுத கடத்தல் வழக்குகள் தொடர்பாக ஹாசிம் பாபா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து கணவரின் இடத்துக்கு சோயா கான் வந்தார். கணவரின் கீழ் செயல்பட்டு வந்த ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் சோயா கானே தலைமையேற்று நடத்தி, பெண் தாதாவாக வலம் வந்தார்.

    பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட போதிலும் எதிலும் தனது பெயர் வராமல் பார்த்து கொண்டதால், போலீசார் இவரை நெருங்க முடியாமல் இருந்தது.

    இதுவரை அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதனால் பல ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் அவர் டிமிக்கி கொடுத்து வந்தார். தற்போது ஆதாரத்துடன் போலீஸ் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். சோயா கான் தலைமையிலான கும்பல், போதைப்பொருள் கடத்தலை முக்கிய தொழிலாக செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சோயாகான் சினிமா பிரபலம் போல் மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தனது கணவர் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி திகார் சிறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தொழில் ரகசியங்களை சமிக்ஞைகள் வாயிலாக அவர் தனது கணவருக்கு பகிர்ந்து வந்துள்ளார்.

    பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, சோயா கானின் தாயார் கடந்த 2024-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது தந்தை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு பிரதமர் மோடி உதவி செய்தார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    தலைநகர் டெல்லியில் 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுடன் சேர்ந்து, சரத் பவார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சரத் பவார் நார்காலியில் அமர்வதற்கு உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு மோடி கொடுப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பேசிய பிரதமர் மோடி, "மகாராஷ்டிரா மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஒரு புதிய உச்சத்தை அளித்திருக்கிறது. சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'சாவா' திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

    சரத் பவாரும் பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளது, இந்தியா கூட்டணியில் விரிசலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    • அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?

    மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.

    2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?

    அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.

    • 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்படும் ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் சரிகைநூல் ஆகியவற்றுடன் கூடிய உயர் ரக காகிதத்துடன் 2 பேர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் இவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டபோது பிடிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்தநாள் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மற்றும் அரியானாவின் பிவானியில் அச்சு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மராட்டியம், அரியானா, தெலுங்கானா, பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் 11 இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் 7 எந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ.50, ரூ.100 நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    சங்கமனர் மாவட்டம் மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தில் 2 பேரும், பெல்காமில் 3 பேரும் கைதானார்கள். இதுபோல ஆந்திரா மற்றும் பீகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது பாரதிய நியாய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ×