search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போபால்:

    மத்திய பிரதேம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் உத்தரபிரதேசத்தின் ரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்குச் சென்றது.

    நாடன் தேஹத் என்ற இடத்தில் பஸ் சென்றபோது லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

    இந்தூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்பட நெய் உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு நிறுவனம் கலப்பட நெய்யை உற்பத்தி செய்துவருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய்களை கலந்து தரமற்ற நெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். பின்னர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.

    • நாடு திரும்பாமல் அங்கேயே சட்டவிரோதமாக தங்கியிருந்து வந்துள்ளார்.
    • விசா காலம் கடந்து தங்கியிருப்பதையும், முகாம் நடவடிக்கை குறித்தும் கண்டுபிடித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சுற்றுலா விசா முடிந்து ஓராண்டுக்கும் மேலாக மனநல சிகிச்சை முகாம் நடத்தி வந்த அமெரிக்கப் பெண் போலீசிடம் பிடிப்பட்டார்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த வனேசா என்கிற பெண், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். ஆனால் ஜூலை 2024-ல் அது காலாவதியாகியுள்ளது. இருப்பினும் அவர் நாடு திரும்பாமல் அங்கேயே சட்டவிரோதமாக தங்கியிருந்து வந்துள்ளார்.

    அவர் தங்கியிருந்த காலத்தில், வாடகை வீட்டில் இருந்தபடி மனநல சிகிச்சை முகாமை நடத்தத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, பணம் இல்லாததால் அந்த பெண்ணை வீட்டு உரிமையாளர் வாடகையின்றி தங்கவும், பணம் இல்லாததால் உணவு மற்றும் பிற தேவைகளையும் வழங்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த பெண் விசா காலம் கடந்து தங்கியிருப்பதையும், நடத்திக் கொண்டிருக்கும் முகாம் நடவடிக்கை குறித்தும் கண்டுபிடித்தனர்.

    பிறகு, பார்கி போலீஸ் அமெரிக்க தூதரகத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்ததை அடுத்து, பெண் நாட்டைவிட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது.

    இருப்பினும், அவர் வெளியேற உதவுவதோடு, இந்தியாவில் இருந்தபோது அந்த பெண் என்ன செய்தார் என்பதை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர், தேவையான ஆவணங்களை போலீசார் ஏற்பாடு செய்த நிலையில், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

    • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
    • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • இந்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தார்.

    அவரது புகாரில், "நான் மல்டெய்ல் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறேன். சில ஆட்களுக்கு முன்பு எனது கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தேன் என்று குற்றம் சாட்டி போலீசார் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஜன்னலில் என்னை கட்டி வைத்து போலீசார் அடித்தனர்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எஸ்பி, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள காவல்நிலையத்தில் கால்வாய் கட்டுவது தொடர்பான பிரச்னை தொடர்பாக பாஜக பெண் கவுன்சிலரின் கணவர் அர்ஜுன் குப்தா விசாரணைக்கு வந்துள்ளார்.

    அப்போது பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்ட, யூனிபார்மை கழற்றி எறிந்து எஸ்.ஐ, வாக்குவாதம் செய்துள்ளார்.

    இந்தநாடு பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து மத்தியப் பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ரா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.
    • இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மழைக்காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்ட வடிவத்தை அப்பெண் முன்னெடுத்துள்ளார்.

    பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    "சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாகவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி இதுவாகும்" என்று அப்பெண் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
    • அந்தரங்க வீடியோவை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    மத்தியப் பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்திய ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அசாமில் பணியில் உள்ள சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி [நாயக்] தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி மேனஜராக பணியாற்றிவரும் கவுசல்யா என்ற திருமணமான 35 வயது பெண் நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

    அவரை உடனே மருத்துவமனைக்கு போலீஸ் சென்று அனுமதித்துள்ளனர். கவுசல்யா தனது புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் [Mhow] பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவரை நான் அறிவேன். அவர் அசாமுக்கு மாற்றலான பின் தற்போது தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சஞ்சய், அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    அங்கு அறையில் வைத்து என்னை பாலியல் தொல்லை செய்த அவர் எனது அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயன்றார். அங்கிருந்து தப்பித்து தான் வந்ததாக தெரிவித்திருந்தார். கவுசல்யாவின் புகாரை அடுத்து ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வடமேற்குப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக இந்த 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்

    உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இந்த மாநிலங்களில் சனிக்கிழமை வரை இடைவிடாத மழை பெய்யும்.

    குவாலியர், மத்தியப் பிரதேசத்தில் கனமழையைத் தொடர்ந்து பார்வதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பிதர்வாரில் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.


    • கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
    • அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் பெய்து வரும் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

    • கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்த 7 பேர் கும்பல் காரை சுற்றி வளைத்தனர்.
    • தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 பேரும் மோவ் சிவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் மோவ் கண்டோன்மென்ட் நகரில் உள்ள ராணுவ கல்லூரியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய 2 இளம்பயிற்சி ராணுவ அதிகாரிகள் சம்பவத்தன்று தங்களது பெண் தோழிகளுடன் சுற்றுலா சென்றனர்.

    மோவ்-மண்டலேஸ்வர் ரோட்டில் உள்ள சுற்றுலா தளத்துக்கு சென்ற 4 பேரும் இயற்கை அழகை ரசித்து பார்த்தனர். பின்னர் ஒரு ராணுவ அதிகாரி பெண் தோழியுடன் காரில் அமர்ந்து இருந்தார். மற்றொரு ராணுவ அதிகாரி தனது தோழியுடன் மலை உச்சிக்கு சென்றார்.

    அப்போது கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்த 7 பேர் கும்பல் காரை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து அவர்களிடம் இருந்து பணம், மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். சத்தம் கேட்டு மலை உச்சிக்கு சென்றிருந்த மற்றொரு ராணுவ அதிகாரி, பெண் நண்பருடன் அங்கு வந்தார். அவர்களையும் அந்த கும்பல் ஆயுதங்களால் தாக்கினார்கள்.

    மேலும் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் பெண் தோழியை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளை பிடித்துக்கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு அக்கும்பல் மிரட்டியது.

    இது தொடர்பாக அந்த இளம் ராணுவ அதிகாரி மூத்த அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 பேரும் மோவ் சிவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    ராணுவஅதிகாரிகளுடன் இருந்த 2 பெண்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. 4 பேரையும் அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவன் மீது ஏற்கனவே போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மாதம் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் அடங்குவதற்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் இது போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்காவை நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

    8-ம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோவில்களைக் கட்டினார். அவை இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

    குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான 2 பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்.

    ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பீஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது.

    ரிக் வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

    ×