search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்
    • அவர்கள் [ஷிண்டே - பாட்னாவிஸ் - அஜித் பவார் தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர்

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 இல் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. ஆனாலும் அடுத்த முதல்வரை தேர்வு செய்து ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஷிண்டே விட்டுக்கொடுத்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு என்றும் நரேந்திர மோடி வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் முதல்வர் இப்பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே பொறுப்பளாராக நீடிக்கிறார்.

     

    இந்த நிலையில்தான் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் வரை ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை... என்ன நடக்கிறது? டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர்   அறிவிக்கிறார். அவர் என்ன ஆளுநரா?... இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு முதல்வரைத் தீர்மானிக்க முடியாததும், அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதும் மகாராஷ்டிராவை அவமதிப்பு மட்டுமல்ல, அவர்களின் அன்பான தேர்தல் ஆணையம் வழங்கிய உதவியையும் கூட அவமதிக்கிறது [கிண்டலாக]. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சிறப்புக் கட்சிகளுக்கு விதிகள் பொருந்தாது.

    ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஆளுநரிடம் எதையும் காட்டாமல், ஒருதலைப்பட்சமாக பதவிப் பிரமாண தேதியை அறிவிப்பது, அராஜகமாகும். இதற்கு மத்தியில் நமது காபந்து முதல்வர் [ஷிண்டே] ஒரு மினி விடுமுறையில் [சொந்த கிராமத்தில்] இருக்கிறார், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிகிறது. அவர்கள் [மகாயுதி தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர். இந்நேரம் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம்.
    • யாரும் அழிக்க வேண்டாம், அது தானாகவே அழிந்து விடும்

    மக்கள் தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால் இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியைப் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே அழிந்து விட்டன.

    குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 க்கும் கீழ் குறைவாக உள்ள சமூகங்கள் அழிந்துவிடும் என மக்கள் தொகை அறிவியல் காட்டுகிறது. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

     

    மக்கள் தொகை குறைந்த சமூகத்தை அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும். எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    சீனாவை பின்னுக்குத்தள்ளி  இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் மோகன் பகவத்தின் கருத்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மோகன் பகவத் கருத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழும் கலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
    • அரசியலில் ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்

    அரசியல் என்பது எதிலும் திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவர். நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நாக்பூரில் நடந்த '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேடையில் அவர் பேசியதாவது,

    ஒரு நபர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், வாழ்க்கை சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் "வாழும் கலையை" அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

     

    அதற்கு உதாரணம் கூறிய அவர், அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்களின் கடல், அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.. உறுப்பினராக வருபவர் தனக்கு எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்காததால் வருத்தப்படுகிறார்.

    அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ., வருத்தத்தில் உள்ளார். அமைச்சர் ஆனவர், அமைச்சரவையில் நல்ல துறை கிடைக்காமலும், முதல்வராக முடியாமலும் தவிக்கிறார்.

    முதல்வரோ, எப்பொழுது மேலிடம் பதவியை விட்டு போக சொல்லுமோ என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் பதவிக்கு ஆர்எஸ்எஸ் செல்வாக்கு அதிகம் உள்ள நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

     

    • சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
    • அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.

    தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

    இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

    5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • குடிநீரை கவனமாக கையாள வேண்டும்.

    மும்பையில் இன்று துவங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் பத்து சதவீதம் குறைக்கப்படுகிறது. ஏற்கனவே மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பின் படி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்று (நவம்பர் 30) குடிநீர் விநியோக அமைப்பின் பாகங்களில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அதனை சரி செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதன்படி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தானே மற்றும் பிவாண்டி பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 சதவீதம் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது.

    குடிநீர் விநியோகத்தை குறைப்பதன் மூலம் தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்ய முடியும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் குடிநீரை கவனமாக கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் நீர் விநியோகம் பாதிகப்படும். தானே மற்றும் பிவாண்டி பகுதிகளிலும் நீர் விநியோகம் குறைக்கப்படுகிறது. 

    • நிதி உள்ளிட்ட இலாகாவை ஷிண்டே தங்கள் அணிக்கே கோரி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
    • ஏக்நாத் ஷிண்டேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகாவின் மகாயுதி கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கூட்டணியில் பாஜக 132 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது, ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன.அடுத்த முதல்வராக யார் என்பதில் பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி நிலவியது.

    ஷிண்டே ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்து பட்னாவிஸ், அஜித் பவாருடன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த போதும் இழுபறியான சூழலே நிலவி வருகிறது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதியுடன் மகாராஷ்டிர சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது தாமதம் ஆகி வருகிறது.

     

     

    இந்த நிலையில்தான் முதல்வர் பதவி பாஜகவுக்கு செல்லும் என கூட்டணியில் உள்ள என்சிபி தலைவர் அஜித் பவார் சஸ்பென்ஸை உடைத்துள்ளார். டெல்லியில் மகாயுதி தலைவர்கள் கூட்டத்தில் பாஜவில் இருந்து முதல்வரை முன்னிறுத்தி மகாயுதி ஆட்சி அமைப்பது என்றும், மீதமுள்ள இரண்டு கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

    மேலும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. 1999ல், ஆட்சி அமைக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். முதல்வர் உறுதியானாலும் அமைச்சரவை பங்கீட்டில் ஷிண்டே கறார் காட்டி வருவதாகத் தெரிகிறது. நிதி உள்ளிட்ட இலாகாவை ஷிண்டே தங்கள் அணிக்கே கோரி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

     

    ஏக்நாத் ஷிண்டேவின் உடல்நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார் எனவும் தவகவல்கள் வெளியாகி உள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் ஷிண்டேவுக்கு சிகிச்சை அளித்து வரும் குடும்ப மருத்துவர் ஆர்.எம்.பாட்ரே,  கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் அவர்  அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  மூன்று முதல் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது  என்று பாட்ரே தெரிவித்தார்.

    இதற்கிடையே புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் மாலை 5 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறும் என்று சந்திரசேகர் X இல் பதிவிட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
    • வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.

    டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

     

    முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.

    மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

     

    மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

     

    வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

    • மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது.
    • மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார்

    இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களா வெளியே  நிற்கும் நாய் என மகாராஷ்டிர காங்கிரஸ் மேலவை உறுப்பினர் [எம்எல்சி] பாய் ஜக்தாப் பேசியுள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மொத்தம் ள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரசின் மகாயுதி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வென்றது. முன்னதாக 6  மாதங்களுக்கு முன் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்த நிலையில் 6  மாதங்களுக்குள் எப்படி மக்கள் மாற்றி வாக்களிக்கக்கூடும் என்றும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பாய் ஜக்தாப், "தேர்தல் ஆணையம் ஒரு நாயைப் போல் செயல்படுகிறது, நரேந்திர மோடி ஜியின் பங்களாவுக்கு வெளியே அமர்ந்திருக்கும் நாய் அது. நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது நரேந்திர மோடியின் செல்வாக்கின் கீழ் செயல்படும் பொம்மைகளாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.

    மேலும் இவிஎம் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், " நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தினார். ஆனால் இப்போது ஏறுக்குமாறாக பேசுவதாக குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் எம்எல்சி. ஜக்தாப் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.

    கோண்டியா-அர்ஜுனி சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.
    • பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர்.

    மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆளும் மாகயுதி [பாஜக 132, ஷிண்டே சேனா 57, அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

    முதல்வர் பதவி மீண்டும் ஷிண்டேவுக்கா அல்லது பட்னாவிஸ்கா என்பதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் முதல்வர் பத்வியை தான் விரும்பவில்லை என்றும் மோடியின் முடிவே இறுதியானது என்றும் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க மாட்டார் என்று அவரது கட்சியினர் தொடர்ந்த உறுதியாக கூறி வருகின்றனர். அமித் ஷா உடனான சந்திப்பு பாசிட்டிவ் ஆக அமைந்ததாக ஷிண்டே தெரிவித்தார்.

    அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மாநில தலைநகர் மும்பையில் நடைபெறும் மகாயுதி கூட்டணியின் மற்றொரு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையிலதான் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று நடக்க இருந்த இந்த முக்கிய மீட்டிங் ஏக்நாத் ஷிண்டே ஆப்சென்ட் ஆனதால் கூட்டமே ரத்தாகியுள்ளது.

     

    டெல்லி பயணத்துக்கு பின்னர் பட்னாவிஸ், ஷிண்டே, பவார் என மூன்று பேராக மும்பை திரும்பினர். ஆனால் ஏக்நாத் ஷிண்டே சாத்தாரா [Satara] மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு திடீரென சென்றுள்ளார். இதனால் இன்று நடக்க  இருந்த மீட்டிங்கே ரத்தாகி ஆட்சி மற்றும் அமைச்சரவை பங்கீட்டை தீர்மானிப்பதில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பதவியை ஷிண்டே விட்டுக்கொடுப்பதாகக் கூறியிருந்தாலும் அமைச்சரவை பங்கீட்டில் திருப்தியின்மை இருப்பதாக மகாயுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் கூட்டத்தை புறக்கணித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது.
    • 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79, 450 புள்ளிகளில் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 9.15 மணிக்கு சென்செக்ஸ் 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது. நேற்று 80281.64 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் உயர்ந்து தொடங்கியது.

    அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10.30 மணியளவில் சட்டென சென்செக்ஸ் புள்ளிகள் சரிய ஆரம்பித்தது. 15 நிமிடத்திற்குள் சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் 700 சரிந்து வர்த்தகம் ஆனது.

    தற்போது 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79450 புள்ளிகளில் வர்த்தகமானது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று 210 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று 24274.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை 24274.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, தற்போது. 24070 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    • நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன்
    • என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன்

    288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.

    நேற்றுடன் மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆன நிலையில் நேற்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த அரசு அமையும் வரை அவர் பொறுப்பாளராக இருப்பார் என்று கூறப்பட்டது.

    அடுத்து யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இன்று மதியம் தானேவில் செய்தியர்களை சந்தித்த அவர், நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன். எனக்கு என்ன கிடைக்கிறது என்பது முக்கியமில்லை, மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்,புகழுக்காக நான் வரவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை.

    என்டிஏ கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியே இதில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை இறுதி முடிவாக நாங்கள் ஏற்போம். என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன். அவர்கள் எடுப்பதே இறுகி முடிவு என்று தெரிவித்துள்ளார். 

    ×