என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
முதல்வர் பதவியை விரும்பவில்லை.. மோடியின் முடிவை ஏற்கிறேன் - ஏக்நாத் ஷிண்டே
- நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன்
- என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது.
நேற்றுடன் மகாரஷ்டிர சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆன நிலையில் நேற்றைய தினம் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த அரசு அமையும் வரை அவர் பொறுப்பாளராக இருப்பார் என்று கூறப்பட்டது.
அடுத்து யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று மதியம் தானேவில் செய்தியர்களை சந்தித்த அவர், நான் என்னை ஒரு முதலமைச்சராக எப்போதும் கருதியதில்லை, சாமானிய மனிதனாகவே கருதுகிறேன். எனக்கு என்ன கிடைக்கிறது என்பது முக்கியமில்லை, மக்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்,புகழுக்காக நான் வரவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை.
என்டிஏ கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியே இதில் முடிவெடுக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை இறுதி முடிவாக நாங்கள் ஏற்போம். என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் நான் கூறினேன். அவர்கள் எடுப்பதே இறுகி முடிவு என்று தெரிவித்துள்ளார்.
#Live l 27-11-2024 ?ठाणे ? पत्रकार परिषदेतून लाईव्ह https://t.co/VmH4C3lRNt
— Eknath Shinde - एकनाथ शिंदे (@mieknathshinde) November 27, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்