search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.
    • மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேட்டார்

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரசை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன.

    தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சனைகளும் இருந்து வந்தது. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணிக்குத் தாவினார்.

    மேலும் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடி கொடுக்காமல் தள்ளியே இருந்தார்.

    ஆனாலும் மக்களவை தேர்தலில் கணிசமான அளவு வெற்றியைப் பதிவு செய்த இந்தியா கூட்டணி பாஜகவின் தனிப் பெரும்பாண்மை கனவை தகர்த்து கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் வெற்றி பெரும் அளவுக்கு இந்தியா கூட்டணி வலிமை பெறவில்லை.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியை விட்டு தள்ளியே இருந்த மம்தா, தற்போது கூட்டணிக்குத் தலைமை தாங்க தயார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

     

    கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் முன்னணிக்குத் தலைமை தாங்கவில்லை.

    முன்னணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் கண்டுகொள்வதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்று தெரிவித்தார்.

     வலுவான பாஜக-விரோத சக்தியாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நீங்கள் ஏன் இந்த கூட்டணிக்கு பொறுப்பேற்கவில்லை என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் வங்காளத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

    முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்குமாறு தெரிவித்த நிலையில் தற்போது மம்தாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் மகாராஷ்டிர சட்டமான்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் பெரு வெற்றி பெற்றது. இதை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம். முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
    • மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். இவரது உறவினர் (nephew) அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அக்கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மீடியா ஒன்று மம்தா பானர்ஜியிடம், உங்களுடைய அரசியல் வாரிசு யார்? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு மம்தா பானர்ஜி பதில் அளித்து கூறியதாவது:-

    மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். நாங்கள் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், பூத் பணியாளர்களை கொண்டுள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சியாகும். கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். இன்று புதிதாக வருபவர்கள் நாளை மூத்த தலைவர்கள் ஆவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு ஒழுக்கமான கட்சி. எந்தவொரு தனிநபரும் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட முடியாது.

    நான் என்பது கட்சியல்ல. நாங்கள்தான் கட்சி. இது ஒரு கூட்டு குடும்பம், மற்றும் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.

    • வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் சவுத் 24 ஜேநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 9 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முஸ்தகின் சர்தார் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். மறுநாள் காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உள்ளூர் வாசிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், போலீஸ் நிலைகளை சேதப்படுத்தினர்.

    சிறுமியின் சடலம் ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின் நடந்த இந்த மற்றொரு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கப்படும் என மம்தா உறுதியளித்தார்.

    அதன்படி மேற்கு வங்க போலீஸ் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் குற்றவாளி முஸ்தகின் சர்தார் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது

    விசாரணையின் போது 36 சாட்சிகள் ஆஜரான நிலையில், பருய்பூர் விரைவு நீதிமன்றம் நேற்று [வியாழக்கிழமை] முஸ்தாகின் சர்தாருக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் நடந்து 61 நாட்களில் மரண தண்டனை வழங்கப்படுவது மேற்கு வங்கத்தின் நீதித்துறை வரலாற்றில் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஒரு வழக்கில் தண்டனை அதுவும் மரண தண்டனை வழங்கப்படுவது மாநில வரலாற்றில் முதல் முன்னோடியாக அமைந்துள்ளது . இந்த சிறந்த சாதனைக்காக மாநில காவல்துறை மற்றும் வழக்குத் தொடர்பாக பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
    • பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.

    மேற்கு வங்கத்தின் ஹல்தியா, பர்பா மேதினிபூரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. துர்காபூர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில், பணம் கொடுத்து போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடந்ததாக கூறப்படுகிறது.

    • திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு.
    • புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார்.

    திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது பழமொழி. நமது இந்திய நாட்டு கலாசாரத்தின்படி திருமணம் பந்தத்தில் இணையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக தாலிகட்டும் நிகழ்வு கருதப்படுகிறது.

    திருமணத்தின்போது மணமகளுடன் தன் இல்லற வாழ்வை பகிர்த்து கொள்ள தாலிகட்டும் நேரத்தை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பது இயல்பு. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் திருமணம் ஒன்று சமீபத்தில் நடந்தது.

    இதில் மணமகன் அலங்காரத்துடன் திருமணத்துக்கு தயாரான நிலையில் வாலிபர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். தாலி கட்டுவதற்கு மணமகளுக்காக அவர் காத்திருக்கும் சமயத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடினார். அருகே புரோகிதர், புகைப்பட கலைஞர் ஆகியோர் இருந்தநிலையில் அவா் கூலாக கேம் ஆடினார். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி ஒருசில நாட்களில் 4 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    • மேற்குவங்க சட்டமன்றத்தில் மம்தா உரையாற்றினார்
    • எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்கான் அமைப்பின் இந்து மதத் துறவிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வங்கதேசதுக்கு ஐநாவின் அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க [பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

     

    மேற்குவங்க சட்டமன்றத்தில் உரையாற்றிய மம்தா, எங்களுக்கு வங்கதேசத்தில் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் உள்ளனர். இதில் இந்திய அரசு எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலகில் எங்கும் மத அடிப்படையில் நடக்கும் அட்டூழியங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

     

    வங்கதேசத்தில் இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது மக்களை நாம் மீட்டெடுக்க முடியும். இந்திய அரசு இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.ஐநா அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க ஆவன செய்ய பிரதமர் இதில் தலையிட வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். வங்கதேச மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
    • கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் இதை செயல்படுத்த வேண்டும்

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்துக்களைப் போராடத் தூண்டியதாகவும் பேரணியில் வங்கதேச கொடியை அவமதித்ததாகவும் இஸ்கான் இந்துமதத் தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரித்தது.

    இந்நிலையில் வங்கதேச மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாது என்று மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் மருத்துவமனை அறிவித்துள்ளது. வடக்கு கொல்கத்தாவின் மானிக்தலா பகுதியில் உள்ள ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

     

    இந்த முடிவு குறித்துப் பேசிய மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த், நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவதைப் பார்த்து, வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    ஆனால், அங்கு இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே பார்க்க முடிகிறது. எனவே கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    • தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்குவங்க கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ராஜ் பவனில் தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜ்பவனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு தனது திருவுருவ சிலை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    தனது திருவுருவ சிலையை சி.வி.ஆனந்த போஸ் திறந்து வைத்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

    இது தொடர்பாக பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ், "நம் கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் அவரது சிலையை திறந்து வைத்துள்ளார். அவருக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளார். அவர் தனது சிலைக்கு மாலை அணிவிப்பாரா? இது தன்னை தானே உயர்வாக நினைக்கும் மனப்பான்மை" என்று தெரிவித்தார்.

    • புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு ஆறு மாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. பிறந்த பச்சிளங் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கவ்விச்சென்றது.

    இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், உதவிக்காக பலமுறை அழைத்த விடுத்த போதிலும் எந்த ஊழியர்களும் தங்களுக்கு உதவ வரவில்லை என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அதனிடையே, மருத்துவமனையின் அலட்சியம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பிரதிமா பூமிக் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் உள்ள [பங்குராவில்] சோனாமுகியின் அதிர்ச்சிகரமான சம்பவம், மம்தா பானர்ஜியின் 'உலகத் தரம் வாய்ந்த' சுகாதாரத் தலைமையின் கீழ் உள்ள கடுமையான யதார்த்தத்தை அம்பலப்படுத்துவதாக கூறி பிறந்த குழந்தையை நாய் கவ்விக்கொண்டு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மருத்துவப் பெண் ஒருவர், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குறைந்த மாதத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் வெற்றி பெற்றார்
    • காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா திருவிழா 2024 நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் இளம் வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி வெற்றி பெற்றார்.

    உலகின் நம்பர் 1 செஸ் ஜாம்பவான் நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சன், பிரிஸ்டி முகர்ஜியிடம் டிராபியை கொடுக்கும் சமயத்தில் பிரிஸ்டி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரஸ்டியின் செயலை கவனித்த கார்ல்சன் முகத்திலும் புன்னகை அரும்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா நிகழ்வானது மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தன்யோ ஆடிட்டோரியத்தில் வைத்து நவம்பர் 13 தொடங்கி நேற்று நவம்பர் 17 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது
    • லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

    மேற்கு சிங்கத்தில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் [Alipurduar] நகரில் உள்ள ஜெய்கான் [Jaigaon] பகுதியில் நேற்று முன்தினம் இந்த கொடூர நிலைக்கு ஆளாக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அந்த உடல் அப்பகுதியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாந்தாபீர் லாமா [Santabir Lama] என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. தல்சிங்பாரா [Dalsingpara] பகுதியைச் சேர்ந்த லாமா சில வருடங்கள் முன்னர் ஜெய்கான் பகுதியில் வந்து குடியேறி ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.

    அப்பகுதியில் உள்ள உள்ளூர் தேவாலயத்திலும் இயங்கி வந்துள்ளார். இந்நிலையில் லாமாவை இந்த அளவு வன்மத்தோடு யார் கொலை செய்தனர் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

    லாமாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகப்படும் 7 பேர் மீது புகார் அளித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட லாமாவின் உடல் அலிபூர்துவார் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
    • ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.

    இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.

    இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

    ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×