search icon
என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.
    • அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

    இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு எதிர்வரும் துர்கா பூஜா பண்டிகையில் கவனம் செலுத்தும்படி மம்தா பானர்ஜி கூறியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் பிரதான பண்டிகையான துர்கா பூஜா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாய் மம்தாவின் கருத்தை சாடியுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது, நாங்கள் இதுவரை எங்கள் மகளுடன் துர்கா பூஜா பண்டிகையை கொண்டாடி வந்தோம். ஆனால் இனி வரும் வருடங்கள் அனைத்திலும் அது நடக்கப்போவதில்லை. அவரது [மம்தா] குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் எனது மகளை அவர்கள் கொலை செய்தார்கள், இப்போது அந்த கொலைக்கு நீதி கேட்கும்  போராட்டத்தையும் ஒடுக்க பார்கிறார்கள் என்று பெண் மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார். 

    • கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
    • பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக

    ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.

    நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    • டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
    • மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலத்தில் ஓரு மாதத்துக்கும் மேலாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மத்திய-மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற மாநில அரசின் உறுதியையும் கபில்சிபல் கோர்ட்டில் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

    அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதேநேரம் தங்கள் பாதுகாப்பு தொடர்பான டாக்டர்களின் கவலைகளை போக்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநில சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார கல்வி இயக்குனர் (டிஹெச்இ) பதவி விலக கோரி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், இன்று மதியம் சுகாதாரத்துறையின் தலைமையகமான 'ஸ்வஸ்த்ய பவனுக்கு' பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும், "எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தையும் 'நிறுத்தப் பணியையும்' தொடர்வோம். சுகாதார செயலாளரும், சுகாதார கல்வி இயக்குனரும் ராஜினாமா செய்ய விரும்புகிறோம். நாளை மதியம் ஸ்வஸ்தியாவுக்கு பேரணி நடத்துவோம். பவன்," என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்தார். 

    • தீபம் ஏற்றி நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.
    • நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது- பெற்றோர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களில் தீபம் ஏற்றி நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறும்போது "நாம் நீதியை எளிதாக பெற முடியாது. அதை பறிக்க வேண்டும். எல்லோருடைய உதவியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பது போராடுவதற்கு தைரியத்தை கொடுத்துள்ளது" என்றார்.

    பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    • பெண் டாக்டர் கொலை தொடர்பாக கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
    • கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தியுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை குறித்து அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி நடத்த வேண்டும் என்று முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு கவர்னர் சிவி ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலை மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன்.
    • மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. ஜவர் சிர்கார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன். மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. நீதி வழங்க வேண்டும். நான் எனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மேற்கு வங்க சட்டசபையில் பலாத்கார தடுப்பு மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த மசோதாவை மாநில கவர்னர் ஆனந்த் போஸ் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.

    இதையடுத்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற மேற்கு வங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

    • ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது.
    • சந்தீப் கோஷின் வீடு மற்றும் கொல்கத்தால் உள்ள சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைதாகி உள்ளார்.

    மேலும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது.

    இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் வீடு மற்றும் கொல்கத்தால் உள்ள சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
    • போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ந்தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். தற்போது இரவை மீட்டெடுப்போம் என போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண் மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், "போலீசார் முழுமையான விசாரணையின்றி வழக்கை முடிக்க முயற்சித்தனர். போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர். எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மகள் கொலைக்கு பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களிடம் பணத்தை கொடுக்க முயன்றார். நாங்கள் உடனடியாக அதை மறுத்தோம்" எனத் தெரிவித்தனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கொல்கத்தா காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

    • போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.
    • பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.



    பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.


     

    மேலும், நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைத்து, கோஷங்களை எழுப்பினர். இதே போன்று கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ்-ம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார். 

    • ஜுனியர் மருத்துவர்கள் குழு போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது.
    • அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?' என்ற வசனம் வரும்

    பெண் மருத்துவர் கொலை 

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் வைத்து பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    அரசும் போலீசும் 

    மேற்கு வங்க மம்தா அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் போராடும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக அன்றைய தினம் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவற்றைச் சூறையாடியது. இதைக் கொல்கத்தா போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு போலீசால் கைது செய்யப் பட்டான். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.

    ஜுனியர் மருத்துவர்கள் போராட்டம் 

    இந்நிலையில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த நேற்று முன் தினம் முதல் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இரவு, லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் நேற்றைய தினம் லால்பஜார் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

     

    கமிஷனருடன் சந்திப்பு 

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் சார்பாக ஜுனியர் மருத்துவர்கள் குழு ஒன்று போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது. குற்றம் நடத்த அன்றைய தினம் உங்களின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நீங்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் பின்னர் அவர்கள் தெரிவித்தனர். தான் பதவி விலக வேண்டுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா? 

    இதற்கிடையில் வினீத் கோயலிடம் செயற்கையாக கையால் தயாரிக்கப்பட்ட முதுகுத்தண்டை ஜூனியர் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இது போலீசால் கோழைத்தனமாக இல்லாமல்  முதுகெலும்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டாமுதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?..ரப்பர் துண்டா?' என்று சந்தேகம் வருகிறது  என இடம்பெற்றிருந்த வசனத்தை இது நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வினீத் கோயால் ராஜினாமா செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
    • ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

    சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சந்தீப் கோஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிய நிலையில் அவருக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ×