என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண் மருத்துவர் கொலை: மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய போராட்டக்காரர்கள் - வீடியோ
- போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.
- பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
#WATCH | Kolkata, West Bengal: Protestors at RG Kar Medical College & Hospital carry out a candle protest against the rape-murder incident. pic.twitter.com/FvExw0jYre
— ANI (@ANI) September 4, 2024
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து போராடினர்.
மேலும், நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்திகளால் அடுக்கி வைத்து, கோஷங்களை எழுப்பினர். இதே போன்று கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ்-ம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார்.