search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    RG Kars ex-principal Sandip Ghosh
    X

    ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு 8 நாள் நீதிமன்ற காவல்

    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
    • ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

    சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2 வாரங்களாக சந்தீப் கோஷை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் சந்தீப் கோஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிய நிலையில் அவருக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Next Story
    ×