search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதுகுத் தண்டா? ரப்பர் துண்டா?.. போராடும் டாக்டர்கள் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு  கொடுத்த ஷாக்!
    X

    முதுகுத் தண்டா? ரப்பர் துண்டா?.. போராடும் டாக்டர்கள் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த ஷாக்!

    • ஜுனியர் மருத்துவர்கள் குழு போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது.
    • அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?' என்ற வசனம் வரும்

    பெண் மருத்துவர் கொலை

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் வைத்து பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    அரசும் போலீசும்

    மேற்கு வங்க மம்தா அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் போராடும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக அன்றைய தினம் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவற்றைச் சூறையாடியது. இதைக் கொல்கத்தா போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு போலீசால் கைது செய்யப் பட்டான். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.

    ஜுனியர் மருத்துவர்கள் போராட்டம்

    இந்நிலையில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த நேற்று முன் தினம் முதல் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இரவு, லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் நேற்றைய தினம் லால்பஜார் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

    கமிஷனருடன் சந்திப்பு

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் சார்பாக ஜுனியர் மருத்துவர்கள் குழு ஒன்று போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது. குற்றம் நடத்த அன்றைய தினம் உங்களின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நீங்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் பின்னர் அவர்கள் தெரிவித்தனர். தான் பதவி விலக வேண்டுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?

    இதற்கிடையில் வினீத் கோயலிடம் செயற்கையாக கையால் தயாரிக்கப்பட்ட முதுகுத்தண்டை ஜூனியர் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இது போலீசால் கோழைத்தனமாக இல்லாமல் முதுகெலும்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டாமுதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?..ரப்பர் துண்டா?' என்று சந்தேகம் வருகிறது என இடம்பெற்றிருந்த வசனத்தை இது நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வினீத் கோயால் ராஜினாமா செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×