search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் பாதையுடன் பறக்கும் ரெயில் இணைப்பு இல்லை
    X

    மெட்ரோ ரெயில் பாதையுடன் பறக்கும் ரெயில் இணைப்பு இல்லை

    மாதவரம்- சிறுசேரி வரையில் 2-வது கட்டமாக அமையும் மெட்ரோ ரெயில் பாதையுடன் பறக்கும் ரெயில் இணைக்கப்படாது என மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம், விரைவில் உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரையில் சுரங்க பாதையிலும் மெட்ரோ பயணிகள் போக்குவரத்து சேவை நடபெற்று வருகிறது. இந்த ரெயில் பயணத்துக்கு பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    இதையொட்டி 2-வது கட்டமாக மாதவரம் பால்பண்ணையில் இருந்து- சிறுசேரி வரையில் 24 பார்க்குகளை இணைக்கும் விதமாக 104 ரெயில் நிலையங்களுடன் புதிய பாதை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ரூ.85,047 கோடி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு (2018) பணிகள் தொடங்கப்பட உள்ளது. 10 ஆண்டுகளில் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    2-வது கட்டமாக உருவாகும் மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் ஒரு பகுதி பறக்கும் ரெயில் பாதையையொட்டி உள்ள வழியாக செல்ல இருக்கிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை உயர்மட்டப் பாதையில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    புதிதாக உருவாக்கப்படும் 2-வது கட்ட மெட்ரோ பாதை பழைய மகாபலிபுரம் சாலை, வேளச்சேரி, மயிலாப்பூர், கலங்கரை விளக்கம் வழியாக செல்ல இருப்பதால் அங்கு பறக்கும் ரெயிலுடன் இணைக்க சாத்தியக்கூறுகள் இல்லை.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2-வது கட்டமாக உருவாக்க உள்ள மெட்ரோ ரெயில் பாதை தனியாக தான் அமைக்கப்படும். சில இடங்களில் பறக்கும் ரெயில் பாதையையொட்டி மெட்ரோ ரெயில் வழித்தடப்பாதை செல்லும். ஆனால் இருபாதைகளும் ஒன்றாக இணைய வாய்ப்பு இல்லை. புதிய வழித்தட பாதைகளுடன் தான் மெட்ரோ ரெயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலைய பாதைகள் சில இடங்களில் பூமிக்கடியில் சுரங்கத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×