search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-ம் இடம் பிடித்தது.
    • இறுதி போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச்சென்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் க.அறிவுச்செல்வன் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    முதல்நாள் போட்டியை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாக்-அவுட் முறையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணியும் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் மோதின. இதேபோல், சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

    இப்போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.

    சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
    • அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
    • கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வதான்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் பௌ ர்ணமியன்று சிவாலயங்களி ல் அன்னாபி ஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ண மியையொட்டி மயிலாடு துறை யில் பல்வேறு சிவாலயங்களில் அன்னா பிஷேகம் நடைபெ ற்றது. சேந்தங்குடி வள்ளலார் கோயில் என்று அழை க்கப்படும் ஸ்ரீ வதான்யே ஸ்வரர் கோயிலில் சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் காய்கறிகள் கொண்டு அலங்கரி க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். இதேபோல், அபயா ம்பிகை மயில் உருவக்கொ ண்டு சிவனை வழிபட்ட தலமான மயிலாடு துறை மாயூரநாதர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவா வடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்ப ட்டு, அன்னத்தால் அபிஷே கம் செய்யப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்த ர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பல்வேறு கோயில்க ளில் நடைபெற்ற அன்னா பிஷேக விழாவில் ஏராளமா ன பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

    • பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை.
    • மணல்மேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 52).

    இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேட்ட பணத்தை கொடுக்காத ஆத்திரத்தில் நண்பர் மதியழகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 2003 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் 2016 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்த குருமூர்த்தி கடலூர் மத்திய சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. தொடர்ந்து 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குருமூர்த்தியை உளவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை டிஎஸ்பி. சஞ்சீவ்குமார் தலைமையில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, தனிப்பிரிவு பாஸ்கர் ஆகியோர் அடங்கிய போலீசார் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் குருமூர்த்தி மணல்மேடு போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கலை திருவிழாவில் அனைத்து அரசு பள்ளி, மானவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

     தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காளகஸ்தி நாதபுரத்தில் உள்ள தனியார் கலை. அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக கலை திருவிழா போட்டி நடந்துவருகிறது. இந்த கலை திருவிழா போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, மானவ_மாணவிகள் பங்கேற்று வருகிறார்கள். நேற்று 2-ம் நாள் போட்டியில் 11,12, பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இவர்களின் திறமைகளை நடுவர்கள் அமர்ந்து பார்த்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி வந்தனர். இந்த கலை திருவிழாவை மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மானவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிகளில்பங்கு பெறுவார்கள் என தெரிவித்தனர்.

    இந்த கலை திருவிழாவில், ஏராளமான மானவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டினர்.

    • மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    • மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.

    இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.

    • பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727 உள்ளனர்.
    • இந்த வாக்காளர் பட்டியல் அங்கிகரிக்கப்பட்ட அனைத்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    சீர்காழி சட்டமன்ற தொகுதியில் (தனி) ஆண் வாக்காளர்கள் 120559, பெண் வாக்காளர்கள் 122424, திருநங்கைகள் 8 என மொத்தம் 242991, பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்130679, பெண் வாக்காளர் 133727, திருநங்கை 3 என மொத்தம் 264409 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனை த்துக்கட்டி பிரதிநிதிகள் முன்னிலையில் கோட்டாட்சியர் அர்ச்சனா வெளியிட்டார்.

    அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,ம ண்டல துணை வட்டாட்சியர் பாபு, அ.தி.மு.க சார்பில் சுரேஷ்குமார், வக்கீல் தியாகராஜன், தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார், நெடுஞ்செ ழியன், சரவணன், காங்கிரஸ் கட்சி சார்பில் மோராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயரெங்கன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • கோபுர கலசம் மற்றும் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்து ள்ளது. ஆதீன தென்மேற்கு மூலையில் முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் ஒன்றரை டன் எடையுள்ள ஞான விநாயகர் புதிதாக அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு திருக்கடையூர் மகேஸ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளை நேற்று முன் தினம் தொ டங்கினர்.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் எடுத்து வரப்பட்டு மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசம் மற்றும் விநாயகர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது .

    தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்ற கும்பா பிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

    விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார்.

    அப்போது சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து காலமுறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்துறை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்கிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.
    • 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல்-திருநகரி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் எடமணல் கிராமத்தில் நடைபெற்றது ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடமணல், திருநகரி, வேட்டங்குடி, திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் தார் பிளாண்ட் தொழிறடசாலையை தடை செய்வதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிப்பது, தார் பிளாண்ட் தடை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்களை அணுகி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கேட்டு பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×