என் மலர்
டென்னிஸ்
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நடைபெற்றது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, ஸ்லோவோகியாவின் ஜோஸ் கோவாலிக், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ ஜோடியைச் சந்தித்தது.
இந்தப் போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வோண்ட்ரசோவா வெள்ளி வென்றார்.
பாரிஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து செக் நாட்டு வீராங்கனையான மார்கெட்டா வோண்ட்ரசோவா மற்றும் போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் கவனம் செலுத்துவதற்காக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுகிறேன் என வோண்ட்ரசோவா தெரிவித்துள்ளார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து வீரர் ஹர்காக்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
- 19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
- ஒலிம்பிக்கில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றவர்.
லண்டன்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
19 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையை பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக, ஆண்டி முர்ரே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது கடைசி டென்னிஸ் போட்டியாக ஒலிம்பிக்ஸிற்காக பாரிஸ் வந்தடைந்தேன். கிரேட் பிரிட்டனுக்காக போட்டியிடுவது எனது தொழில் வாழ்க்கையின் மறக்க முடியாத வாரங்கள். அதை ஒரு இறுதி முறையாகச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆண்டி முர்ரே ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையரில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இதில் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இடம்பிடித்தனர்.
புதுடெல்லி:
சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியல் இடம் பெறும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 2024-ம் ஆண்டின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993-ல் ஓய்வுபெறும் வரை விளையாடினார். 15 ஏடிபி ஒற்றையர் பட்டங்களையும், 399 போட்டிகளையும் வென்று உலகில் 18-வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் இத்தாலி வீரர் பெரேட்டேனி சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் தோற்றார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.
இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் நம்பர்-3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியைச் சந்தித்தது.
ஒரு மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.
யூகி பாம்ப்ரி ஜோடி பெற்ற இரண்டாவது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், குரோசியாவின் டுஜே அஜ்டுகோவிச் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை டுஜே 6-4 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார்.
இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் அரையிறுதியில் நுழைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், -அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை நவோன் 7-6 (7-2) என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.
இறுதியில் நடால் 6-7 (2-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் வென்றார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மரியானோ நவோன் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சுமித் நாகல் தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.