என் மலர்
டென்னிஸ்
- ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் வென்றார்.
பெர்லின்:
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ், அமெரிக்க வீரர் மார்கஸ் கிரானுடன் மோதினார்.
இதில் ஹர்காக்ஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஆர்தர் பில்சை 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஹர்காக்ஸ், ஸ்வரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் அசரென்கா 3-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது ரிபாகினாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ரிபாகினா போட்டியில் இருந்து விலகினார். இதனால் அசரென்கா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்திய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வென்றார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா,
ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றுள்ளார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.
இதில் அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் அசரென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்குடன் மோதினார்.
இதில் நவாமி ஒசாகா 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், செக் வீராங்கனை சினியா கோவாவை சந்திக்கிறார்.
- இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.
ரோம்:
இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.
ரோம்:
இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 1-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.
- இந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் ஸ்பெயின் வீரர் நடால் விலகி உள்ளார்.
மாட்ரிட்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும்.
இதற்கிடையே, விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது.
இந்நிலையில், விம்பிள்டன் போட்டியில் இந்த முறை விளையாடப் போவதில்லை என முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபெல் நடால் அறிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
- அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.
பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.
ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.
ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.
உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.