search icon
என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது.
    • பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. அதில், பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். அப்போது எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.

    இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியது. இதைப்பார்த்த இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர்.

    பிரான்சின் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரே நகரில் காரில் சென்ற 17 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி, போலீசாரின் உத்தரவை மீறி காரை இயக்க முயற்சித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் நிஹெல் என தெரியவந்துள்ளது.

    சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நான்டெர்ரே நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. கடந்த 5 நாட்களாக நிகழ்ந்த இந்த போராட்டத்தின்போது, ஏராளமான வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். வன்முறை தொடர்பாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிஹலின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. நிஹலின் உடல் நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நான்டெர்ரேயில் உள்ள ஒரு மலை உச்சியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதில், நிஹெலின் தாயார் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

    ஊர்வலம் வந்தபோது நூற்றுக்கணக்கானோர் சாலையோரம் நின்று அஞ்சலி செலுத்தினர். கல்லறை பகுதியில் பத்திரிக்கையாளர்கள் தடை செய்யப்பட்டனர். சில பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர்.

    நிஹல் இறுதிச்சடங்கின் போது வன்முறை அதிகரிக்கலாம் என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

    • வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • வாலிபர் ஒருவர் வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து உள்ளே செல்ல முயன்றார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நான்டேன் பகுதியில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் வன்முறைகள் வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-வது நாளாக இந்த கலவரம் நீடித்தது.

    வன்முறையை ஒடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கிய நகரங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கலவரத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. வடமேற்கு பிரான்ஸ் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. நேற்று 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை உடைத்து உள்ளே செல்ல முயன்றார்.

    அப்போது அவர் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவர் கடைக்குள் நுழைந்து திருட முயற்சி செய்ததாகவும், அந்த சமயம் அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம்.
    • பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

    இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    போலீசாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது.

    கார்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். நேற்று இரவும் 3-வது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது.

    போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

    கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகிற திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.பள்ளிகள்,போலீஸ்நிலையங்கள்,குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

    • பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாரீஸ் :

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நாந்த்ரே என்ற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான சிவப்பு நிற சிக்னல் போடப்பட்டிருந்தது.

    ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக சென்றது. காரை நிறுத்தும்படி போலீசார் கூறியும் அந்த கார் நிற்கவில்லை. இதனால் அந்த காரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். கார் டிரைவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் நிலை தடுமாறி ஓடிய கார் சற்று தள்ளி நின்றது.

    இதனையடுத்து கார் அருகே சென்று பார்த்த பிறகு காரை ஓட்டி சென்றது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், போலீசார் சுட்டதில் அவன் காரிலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சிறுவன் கொல்லப்பட்ட நாந்த்ரே பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    பின்னர் இந்த போராட்டம் தலைநகர் பாரீஸ், நாந்த்ரே, துலூஸ், லில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அப்போது பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி போலீஸ் நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மேலும் கார்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்து வருகிறது.

    இந்த வன்முறையின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அப்போது சரமாரியாக கற்களை எறிந்து தாக்கியதில் 24 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் தலைநகர் பாரீஸ், சம்பவம் நடந்த நாந்த்ரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

    • நான்டெர்ரே பகுதியில், மக்கள் மிகுந்த கோபத்துடன், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

    பிரான்சில் போக்குவரத்து போலீசார் கூறியும் காரை நிறுத்த தவறிய 17 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் பாரிசின் மெற்கு பகுதியில் உள்ள நான்டெர்ரே நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது.

    இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், கார் ஓட்டுநரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் குறிபார்ப்பது தெரிகிறது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்கிறது. அதன் பின்னர் அந்த கார் மோதி நிற்பதை வீடியோவில் காண முடிகிறது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த இளைஞனுக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், மார்பில் புல்லட் பாய்ந்திருந்ததால் சிறிது நேரத்தில் பலியானான். விசாரணையில் அவன் பெயர் நேல் எம் என தெரியவந்தது. அவனை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் நேல் எம் தனது காரை அவர்களை நோக்கி ஓட்டிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், இணையத்தில் பரவி வரும் காட்சிகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. அதில், இரண்டு அதிகாரிகள் வாகனத்தை நிறுத்த முயற்சிப்பதையும், ஒருவர் தனது ஆயுதத்தால் ஜன்னல் வழியாக டிரைவரை நோக்கிச் சுடுவதையும் காண முடிகிறது.

    வீடியோவில் உள்ள ஒருவர் "உன் தலையில் சுடப்போகிறோம்" என்று கூறுவதைக் கேட்க முடிவதாகவும், ஆனால் அதை யார் கூறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கி சூடு நடந்தபோது மேலும் இருவர் காரில் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் தப்பி ஓட, மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த செய்தியும், வீடியோ காட்சிகளும் வெளியானதும், நான்டெர்ரே பகுதியில், மக்கள் மிகுந்த கோபத்துடன், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கார்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை எரித்தனர். பேருந்து நிழற்குடைகளை அழித்தனர். ஒரு சிலர் காவல் நிலையம் அருகே பட்டாசு வெடித்தனர்.

    போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அவர்களில் சிலர், இரவு முழுவதும் தடுப்புகளை உருவாக்கினர். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
    • பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு கொடூரத்தை கணவர் அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவரது மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டொமினிக்குக்கு குரூர எண்ணங்கள் உருவாகின. அதன் வெளிப்பாடாக போதை மருந்து கொடுத்து மனைவி மயங்கி படுக்கையில் சாய்ந்த உடன் வெளியில் உள்ள ஆண்களை வீட்டுக்கு அழைத்து மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்து வந்துள்ளார்.

    இந்த கொடூரம் நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ நடைபெறவில்லை. ஆண்டுக்கணக்கில் நடந்துள்ளது. 2011 முதல் 2020 வரை இந்த கொடூரத்தை டொமினிக் அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் பிராங்கா கோஸ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனச்சோர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து கணவரின் கொடூர செயல்களை அறிந்து உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் டொமினிக்கை பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 10 ஆண்டுகளில் 92 கற்பழிப்பு சம்பவங்களை உறுதி செய்தனர். இதில் 26 வயது இளைஞர் முதல் 73 வயது முதியவர் வரை மொத்தம் 51 ஆண்கள் அவரை சீரழித்துள்ளது அறிந்து திடுக்கிட்டனர். பின்னர் கணவர் உள்ளிட்ட 51 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர், நகராட்சி கவுன்சிலர், வங்கி, ஐ.டி. ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர் ஆகியோரும் அடங்குவர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனைவிக்கு கொடுக்கும் உணவில் கவலை எதிர்ப்பு மருந்தான லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்டால் அடுத்த சில நொடிகளில் சம்பந்தப்பட்டவர் மயக்க நிலைக்கு சென்று விடுவார். பின்னர் எழுந்திருக்க சில மணி நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் ஆண்களை அழைத்து மனைவியை அவர் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

    பின்னர் அதனை வீடியோவில் பதிவு செய்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் ஒரு குரூப்பை அவர் உருவாக்கி இருந்துள்ளார். இதில் போதை பொருள் பயன்படுத்தும் பல்வேறு ஆண்கள் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தில் சந்தேகம் வருவதை தடுக்க இரவு நேரங்களிலேயே இந்த கொடூரத்தை அவர் அரங்கேற்றி வந்துள்ளார்.

    மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வரும் ஆண்களை சமையலறையில் ஆடைகளை அவிழ்க்க செய்துள்ளார். பத்து ஆண்டுகளாக மனைவிக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போது, டொமினிக் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் எந்த வன்முறை அல்லது அச்சுறுத்தலையும் செய்யவில்லை. ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்கள் விரும்பும் இடத்துக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு திரும்ப சுதந்திரம் இருப்பதாக வாதிட்டுள்ளனர். ஆனால் காவல்துறை தரப்பில் ஒரு சில ஆண்கள் டொமினிக்கின் மனைவிக்கு விருப்பமான பங்கேற்பாளர்கள் அல்ல என கூறினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கொடூர கணவனின் பிடியில் இருந்து தப்பிக்க விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பத்தாண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து ஆண்களை அனுப்பி பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்துக்கு முன்னதாக பெரிய வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • தீ விபத்தில் தீக்காயங்களுடன் 24 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மத்திய பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க 5வது வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து குறைந்தது 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    தீ விபத்துக்கு முன்னதாக பெரிய வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாவட்ட மேயர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது

    சம்பவ இடத்தில் மொத்தம் 230 தீயணைப்பு வீரர்களும், ஒன்பது மருத்துவர்களும் விரைந்தனர். இந்த தீ விபத்தில் தீக்காயங்களுடன் 24 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தனர்.
    • பலியான இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

    பிரான்ஸ் நாட்டின் மலைப்பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விமானம் விழுந்த பகுதியை தேடினர். ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்த, தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விமானத்தில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இரண்டு ராணுவ வீரர்களும் அருகில் உள்ள ஹெலிகாப்டர் படைப்பிரிவு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்த வீரர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    • பிரான்ஸ் நிலப்பரப்பில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கும்
    • வீடுகள் சேதம், மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது

    பிரான்ஸில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது மிகவும் அரிதானது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலநடுக்கத்தால் பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுற்றுலா நகரான லாய்ரே ரிவர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ''நிலநடுக்கம் ஏற்பட்டபோது படித்துக் கொண்டிருந்த நான், உடனடியாக எழுந்து நின்றேன். அப்பார்ட்மென்ட் முழுவதும் அதிர்ந்தது. சில நொடிகள் இது நீடித்தது. 3-வது மாடியில் இருந்த நான் இதனால் உறைந்து போனேன். நான் இருக்கும் 3-வது மாடி மண்ணில் புதைந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தேன்'' எனத் தெரிவித்தார்.

    கடந்த 2000-ம் ஆண்டு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    • பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

    எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடால் கூறியதாவது:-

    இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.

    23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×