என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பற்றி எரியும் பிரான்சில் வன்முறைக்கு நடுவே 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிட்ட வாலிபர்
- பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது.
- பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. அதில், பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர். அப்போது எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து 'சான்ட்விச்'-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியது. இதைப்பார்த்த இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.