என் மலர்
நீங்கள் தேடியது "அபிஷேகம்"
- கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
- கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் கிராமம். இங்கு கலியுக ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
நகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோசலராமன் திடீரென கோவிலுக்குள் சென்று மூலவரான ரங்கநாதர் சாமி சிலை மீது அமர்ந்து தான் கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் பூசாரி ஒருவர் கோசலராமன் மீது பாலை ஊற்றி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓர் ஆண்டில் நடராஜருக்கு 6 நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
- இதில் மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள் ஆகும்.
சிதம்பரம்:
பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல 6 கால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்தராயணம் என இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.
ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதன் பொருட்டே நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
இந்தக் குறிப்பிட்ட ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிக விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
- ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.
இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.
இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.
இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.
நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.
- திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
- அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.
விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.
ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன.
அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
பாலாபிஷேகம்:-வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலாபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.
சந்தன அபிஷேகம்:- செஞ்சேரிமலை என வழங்கப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பு தரும்.
தேனாபிஷேகம்:- திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக்காணலாம்.
திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திரு நீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்.
கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.
அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.
சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்ய செல்வம் கொழிக்கும்.
- பால் - ஆயுள் விருத்தி
- தயிர் -சந்தான (மக்கள்) விருத்தி
தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி
நல்லெண்ணை-பக்தி
சந்தனாதித்தைலம்- சுகம்
வாசனைத்திரவியம்- ஆயுள் வலிமை
மஞ்சள் பொடி- ராஜ வசியம்
நெய்- மோட்சம்
பஞ்சாமிர்தம்- தீர்க்காயுள்
தேன்- சங்கீத (இசை) வளமை
வாழைப்பழம்- பயிர் விருத்தி
மாம்பழம்- சகல வசியம்
பலாப்பழம்- உலக வசியம்
திராட்சைப்பழம்- பயம் நீங்குதல்
மாதுளம்பழம்-பகை நீங்குதல்
தம்பரத்தம்பழம்- பூமி லாபம்
நாரத்தம்பழம்- நல்ல புத்தி
தேங்காய்த்துருவல்- அரசுரிமை
சர்க்கரை- பகையை அழித்தல்
பால்- ஆயுள் விருத்தி
தயிர்-சந்தான (மக்கள்) விருத்தி
இளநீர்- நல்ல புத்திரப்பேறு
கருப்பஞ்சாறு- சாஸ்திரத் தேர்ச்சி
அரிசிப்பொடி- பிறவிப் பிணிநீங்குதல்
பஞ்ச கவ்யம்- ஆத்மசுத்தி, பாவ நிவர்த்தி
எலுமிச்சம்பழம்- எம பயம் நீக்கும்
நெல்லி முள்ளிப்படி- நோய் நீக்கம்
அன்னம்- ஆயுள் ஆரோக்கியம், தேகம் அபிவிருத்தி
பச்சைக்கற்பூரம்- பயம் நீங்குதல்
விபூதி- ஞானம்
வஸ்திரம்- ராஜயோகம்
புஷ்பம்- மகிழ்ச்சி
சந்தனம்- செல்வம், சுவர்க்கபோகம்
கஸ்தூரி- வெற்றி உண்டாகுதல்
கோரோசனை- ஜபம் சித்திக்கும்
வலம்புரிச்சங்கு- தீவினை நீங்கும்
சொர்ணம் (தங்கம்)- வைராக்யம்
சஹஸ்ரதாரை- லாபம்
கும்பம் (ஸ்நபனம்)- அஸ்வமேதயாகப்பலன்.
- ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
- இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.
காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.
பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.
மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.
மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.
உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.
சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.
அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.
பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.
ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார்.
- எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெறுகிறோம்.
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும்.
திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது.
எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார்.
நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
- ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும்
- புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் & அஷ்ட ஐஸ்வரியம்
ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள்கள் உண்டு.
ஐப்பசி மாதத்து பவுர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல,
ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும்
என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாதம் மற்றும் அபிஷேகப் பொருள்கள், அதன் பலன்கள் விவரம்:
சித்திரை பவுர்ணமி : மரிக்கொழுந்து & புகழ்
வைகாசி : சந்தனம் & மனை, வீடு, நீலம், புதையல்
ஆனி : முக்கனி (மா, பலா, வாழை) & கேட்ட வரம் கிட்டும்
ஆடி : காராம் பசுவின்பால் & பயம் நீங்கும்
ஆவணி : வெல்ல சர்க்கரை & சாபம் தோஷம்,பாவம் நீங்கும்
புரட்டாசி : கோதுமை பசு நெய் கலந்த வெல்ல அப்பம் & அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி : அன்னாபிஷேகம் & கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை : பசு நெய், தாமரை நூல் தீபம் & பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி : பசு நெய் நறுமண வென்னீர் & கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை : கருப்பஞ்சாறு & நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி : பசு நெய்யில் நனைத்த கம்பளி & குழந்தைபாக்கியம்
பங்குனி : பசுந்தயிர் & மனைவி, மக்கள், உறவினர் உதவி
- இந்து மதமானது பதினாறு வகையான உபசாரங்கள் ஆண்டவனுக்கு உரியது என்று கூறுகின்றன.
- நமது முன்னோர்கள் அபிஷேகங்களுக்கு 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள்.
இந்து மதமானது பதினாறு வகையான உபசாரங்கள் ஆண்டவனுக்கு உரியது என்று கூறுகின்றன.
அவற்றுள் ஆற்றல் பொருந்திய அபிஷேக வழிபாடு முக்கியத்துவம் பெற்றவை. தமிழில் இதை திருமுழுக்கு என்று கூறுவார்கள்.
அதி காலையில் ஆலயம் திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் அபிஷேகங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நமது முன்னோர்கள் அபிஷேகங்களுக்கு 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள்.
பிறகு படிப்படியாக 18 ஆகி தற்போது 12 வகை திரவியங்கள் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
கோவிலில் இருக்கும் மூலவர் சிலை வெளிப்படுத்தும் அபரிதமான ஆற்றல் அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கை, அளவை செய்யப்படும் சிறப்பை வைத்தே வெளிப்படுத்தும்.
குறிப்பாக பழமையான ஆலயங்களில் அருள்பாலிக்கும் மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மேலும் அந்த சிலையின் அடியில் சக்தி வாய்ந்த மந்திரத் தகடுகள் பதித்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த சக்திகள் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
அதனால் தான் அபிஷேக தீர்த்தத்தைக் குடிக்கும் போதும், நம் உடலில் தெளித்துக் கொள்ளும் போதும் ஆன்ம பலம் அதிகரிக்கிறது.
அபிஷேகம் செய்யும் போது கருவறையில் இருக்கும் மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் உண்டாகிறது.
இங்குள்ள காற்று மண்ட லத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிக்கப்படுகிறது.
அப்போது காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். அதனால் ஒளிவேகமும் அதிகமாக இருக்கும்.
அபிஷேகமும், மந்திரமும் சொல்லப்பட்டு மூலவர் சிலையில் பட்டு வெளிவரும் போதும் நேர் அயனியாக வெளிவருகிறது.
தீப ஒளி மூலவருக்கு காட்டும்போது கரு வறையில் இருக்கும் காற்றுமண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வந்து நேர் அயனியாகவும், எதிர் அயனியாகவும் பக்தர்களுக்கு ஆற்றல் அளிப்பதாக கூறுகிறார்கள்.
இதுவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலில் இருக்கும் மூலவருக்கும் ஒவ்வொரு விதமான அபிஷேகம் சிறப்பு. அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும்.
பொதுவான அபிஷேகம் என்றால் பாலாபிஷேகம் தான். பக்தர்கள் விரும்பி செய்வதும் பாலாபிஷேகம் தான்.
பக்தர்கள் அபிஷேகத்துக்கு பால் கொண்டு செல்லும் போது ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி கொடுத்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்று இந்துமதம் கூறுகிறது.
- நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.
நல்லெண்ணை-சுகம் அளிக்கும், பஞ்சகவ்யம்- தூய்மையை அளிக்கும், பால்-ஆயுளை வளர்க்கும்,
தேன்-மகிழ்ச்சி, இன்குரல் கொடுக்கும், சர்க்கரை- திருப்தியைக் கொடுக்கும்,
எலுமிச்சை ரசம்-ஞானம் அளிக்கும், இளநீர்- ஆனந்தத்தையும் சிவபோகத்தையும் கொடுக்கும்,
பஞ்சாமிருதம்- ஜயம் கொடுக்கும், தயிர்-செல்வம் அளிக்கும், கருப்பஞ்சாறு- பலம்,
ஆரோக்கியம் கொடுக்கும், மஞ்சள் தூள்- ராஜவசியத்தைக் கொடுக்கும்,
திராட்சை ரசம்-பணம் கொடுக்கும், மாதுளை-அரச பதவி கொடுக்கும்,
நெய்- மோட்சத்தைக் கொடுக்கும், அன்னம்- வயிற்று நோயை நீக்கும், அரிசி மாவு- கடனைப் போக்கும்,
நெல்லிக்கனி-பித்தம் நீக்கும், பழ ரசங்கள்- வறட்சியைப் போக்கும்,
கங்காஜலம்-சாந்தியைக் கொடுக்கும், பன்னீர் கலந்த சந்தனம்- பக்தியையும், ஞானத்தையும் கொடுக்கும்,
ஆவாகன கலச தீர்த்தம்- மந்திர சித்தியைக் கொடுக்கும், விபூதி- செல்வத்தைக் கொடுக்கும்,
சொர்ணாபிஷேகம்- மோட்ச சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்.
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வகை வகையான மலர்கள் சிரசில் வைக்க வேண்டும்.
ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது சல்லடைக் கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு. சத்ருத்ரம், ஏகாதச ருத்ரம், ருத்ரம், புருஷசூக்தம், ம்ருத்யுஞ்ஜம், காயத்ரி, சிவநாமாக்கள் ஆகியவை சொல்லி அபிஷேகம் செய்வது நல்லது.
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
சுகம், சந்தான விருத்தி ஏற்படும். நெய் அபிஷேகம் செய்ய சர்வரோகங்களும் நீங்கி வம்சவிருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர லோபங்களால் பாதிப்பு ஏற்படாது.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் சத்ருக்களை அழிக்கும். தேன், வியாதிகளை நீக்கும்.
கருப்பஞ்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.
- மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
- வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்தசாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா மாவங்களில் கனமழையின் காரணமாக, இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், குறைவான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை மிக எளிமையாக அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.